வந்தே மாதரம் பாடலை பாட மறுத்த அரசு பள்ளி ஆசிரியர் அப்சல் ஹுசைனுக்கு அடி உதை

வந்தே மாதரம் பாடலை பாட மறுத்த அரசு பள்ளி ஆசிரியர் அப்சல் ஹுசைனுக்கு அடி உதை

பீகார்

பீகார் மாநிலத்தில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது பீகார் மாநிலம் கதிகார் மாவட்டம் அப்துல்லாபூர் எனும் இடத்தில் அமைத்துள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்ப்பவர் அப்ஸல் ஹுசைன்.

கடந்த ஜனவரி 26 ம் தேதி அன்று கொண்டாடப்பட்ட குடியரசு தினவிழாவின் போது அப்ஸல் வந்தே மாதரம் பாடலை பாட மறுத்ததோடு மட்டுமல்லாமல் கேலி செய்யும் தொனியில் அமர்ந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த ஊர் பொதுமக்கள் மற்றும் அந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து அப்ஸல் ஹுஸைனை அடித்து வெளுத்து பாடலை பாட வைத்திருக்கிறார்கள்.

இதையும் படிக்க:  விடாமல் போன் செய்து தொந்தரவு செய்த பத்திரிகையாளர் செருப்படி கொடுத்த ராமலிங்கம் மனைவி

இதுகுறித்த காணொளி இணையத்தில் தீயாக பரவி வரவே அப்ஸல் மீது தேசிய கீதத்தை அவமதித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டத்திற்காக வழக்கு பதிவு செய்யவேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அப்ஸல் வந்தே மாதரம் பாடலில் தேசத்தினை தாயாக உருவம் படுத்தியுள்ளதால் நான் பாட மறுத்தேன் அது என் மாதத்திற்கு எதிரானது என்று விளக்கம் அளித்துள்ளார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரசாத் கீதன் கூறும்போது அனைவரும் இந்தியர் என்ற உணர்வின் அடிப்படையில் தான் பணியாற்ற வேண்டும் இங்கு மதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் இதுபோன்ற சம்பவங்கள்தான் நடக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிக்க:  வருங்கால துணை பிரதமருக்கு வந்த சோதனை !

©TNNEWS24

Loading...