வாய் கிழிய பேசிவிட்டு கொங்கு மண்டலத்தை பார்த்து பயப்படுகிறதா திமுக ?

கொங்கு மண்டலம் என்று அழைக்கப்படும் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்கள் எப்போதுமே அதிமுகவின் கோட்டை என்றே இதுவரை நிருபணம் ஆகிவந்திருக்கிறது.

எம்ஜிஆர் காலம் துவங்கி ஜெயலலிதா காலம் வரை கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் கையே ஓங்கியிருக்கும்

அதே நிலை தான் இன்று தொடர்கிறது , அதனால் தான் கொங்கு மண்டலத்தில் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளில் 2 -யில் மட்டுமே திமுக போட்டியிடுகிறது.

கோவை தொகுதியில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் , திருப்பூர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுகிறது.

ஈரோடு தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது , நாமக்கல் தொகுதியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியும் , கரூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது.

கொங்கு மண்டலத்தின் மீதம் உள்ள தொகுதிகளாக பொள்ளாச்சி மற்றும் சேலம் ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டுமே திமுக நேரடியாக களம் இறங்குகிறது.

இதையும் படிக்க:  சிகப்பு சட்டை அணிந்து மேல்மருவத்தூர் சென்றால் முதல்வர் பதவி மே தினத்தில் தில்லாலங்கடி ஆடிய ஸ்டாலின் பரபர பின்னணி.

அந்த தொகுதிகளை கூட கூட்டணிக்கு ஒதுக்க நினைத்தது திமுக ஆனால் கடந்த தேர்தல்களை போல அல்லாமல் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதி மட்டுமே ஒதுக்கியுள்ளதால் திமுக வேறு வழியின்றி இந்த இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையாக உள்ள கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமூகத்தினரின் வாக்குகளை பெற்றால் மட்டுமே திமுக கொங்கு மண்டலத்தில் வெற்றி பெற முடியும் அதற்காக தான் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியை தனது கூட்டணிக்குள் சேர்த்துக்கொண்டது திமுக.

இருப்பினும் கொங்கு மண்டலத்தில் 40 ஆண்டுகளை கடந்தும் இன்னும் அதிமுகவின் அலை ஒயாததால் கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் கை தான் இந்த தேர்தலிலும் ஓங்கி இருக்கும் என்று திமுகவே எண்ணி அங்கு போட்டியிடுவதை தவிர்த்து விட்டதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிக்க:  பெண்காவலரை கைவைத்து மாணவங்கப்படுத்திய திமுக பிரமுகர் சிக்கினார் ! கனிமொழியிடம் கேள்வி

40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் என்று திமுக வாய்கிழிய பேசுமே தவிர செயலில் சாதிக்கமுடியாது என்று அதிமுகவினர் இப்போதே விமர்ச்சித்து வருகின்றனர்.

©TNNEWS24

Loading...