பெரியார் பெயரை சொன்னால் வரும் ஓட்டும் போய்விடும் உளவுத்துறை அறிக்கையால் அதிர்ந்துபோன கனிமொழி

மக்களவை தேர்தல் நெருங்கிவரும் சூழலில் பிரச்சார களம் சூடுபிடித்துள்ளது, அதுவும் தூத்துக்குடி தொகுதியில் இரண்டு நட்சத்திர வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால் தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது.

தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் கனிமொழியும், பாஜக தமிழக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனும் நேருக்கு நேர் மோதுகின்றனர்.

முன்புபோல அல்லாமல் தமிழகத்தில் களம் மாறிவருகிறது முன்பெல்லாம் பெரியார் பெயரை சொன்னால் வாக்குகள் கிடைக்கும் ஆனால் இப்போது அப்படி இல்லை,

பெரியாரின் பெயரை சொன்னால் வரும் வாக்குகளும் வராது என்பது தான், கள நிலவரம் இதை தான் திமுக உளவு அமைப்புகள் கனிமொழியிடம் கூறியுள்ளது.

அதனால் அதிரிந்துபோன கனிமொழி செய்த முதல் காரியம் தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து பெரியார் படத்தை நீக்கியது.

இதையும் படிக்க:  தமிழகம் அதிக அளவில் எதிர்பார்த்து காத்திருக்கும் தூத்துக்குடி யாருக்கு செல்கிறது வெளியானது தேர்தலுக்கு பிந்தைய பிரமாண்ட கருத்து கணிப்பு முடிவு !

பின்னர் நாடார் சமூகத்தின் வாக்குகளை பெற அவர்களின் பணக்காட்டுப்படை கட்சியின் சின்னமாக உள்ள பனைமரங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

கனிமொழி தான் எளிதில் வெற்றிபெற்று விடலாம் என்று தான் தூத்துக்குடி தொகுதியை தேர்வு செய்தார் ஆனால் அவருக்கு பாஜகவின் தமிழிசை கடும்போட்டியளிக்கிறார்.

கனிமொழி எதிர்பார்த்தது ஒன்று ஆனால் நடந்தது வேறொன்று திமுகவின் இந்துக்களுக்கு எதிரான போக்கு அதன் செல்வாக்கை கடுமையாக சரிந்துள்ளது.

மேலும் அதனால் தான் தூத்துக்குடி முழுவதும் பிரச்சாரம் செய்த கனிமொழி ஒரு இடத்தில் கூட பெரியாரை பற்றி பேசவில்லை பெரியாரின் பெயரைமட்டும் உச்சரித்து விடாதீர்கள் என்று கனிமொழிக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர் வந்துள்ளதாம்.

இப்போ சொல்லுங்க இது பெரியார் மண்ணா இல்லையா என பலரும் திமுகவினரை வம்பிழுத்து வர அவர்களோ வாயே திறக்காமல் அமைதியாக இருக்கிறார்கள்.

இதையும் படிக்க:  என்றும் கட்சி நலனே முக்கியம் வாழ்த்து சொன்ன வானதி சிண்டு முடிந்த போலிகளுக்கு செருப்படி !

©TNNEWS24

Loading...