பள்ளி தோழியை கற்பமாகிவிட்டதாக தாயிடம் சொன்ன மகன் என்ன நடந்தது பாருங்கள் !

பள்ளி தோழியை கற்பமாகிவிட்டதாக தாயிடம் சொன்ன மகன் என்ன நடந்தது பாருங்கள் !

சமூகவலைத்தளம்.,

சமூகத்தில் பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரிக்க சமூகவலைத்தளம் முக்கிய பங்காற்றுவதாக பலரும் குற்றம் சுமத்திவருகின்றனர். இந்த நிலையில் பெண் குழந்தைகளுக்கு அறிவுரை சொல்லி வளர்க்கும் பெற்றோர்கள் ஆண் குழந்தைகளுக்கும் அதே போன்ற அறிவுரைகளை வழங்கினால் பாதி குற்றங்கள் குறையும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

அந்த வகையில் சமூகவலைத்தளமான யூடூபில் ஒரு வீடியோ இதுவரை 1 கோடியே 90 லட்சம் பேர் பார்த்தும் பகிர்ந்தும் வருகின்றனர், 16 வயதான இளைஞன் தன் தாயிடம் தன்னுடன் உடன் பயின்ற தோழியை கற்பமாகிவிட்டதாக சொல்ல போவதாகவும் அதற்கு அவர் இதுபோன்ற பதிலை சொல்கிறார் என்று பார்க்கலாம் என்று வீடியோவில் பதிவு செய்துள்ளார்.

இதையும் படிக்க:  கருப்பை இல்லாத பெண்ணிற்கு பெண் குழந்தை பிறந்து அதிசயம் !

இளைஞன் அந்த பதிலை சொன்னதும் அவரது தாய் செருப்பை எடுத்து ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்க உனக்கு என்ன தகுதி இருக்கு, உனது வயது என்ன என்று விளாசி தள்ளிவிட்டார் பிறகு இது நான் விளையாட்டிற்கு சொன்ன பதில் என்று இளைஞன் தாயிடம் சொல்ல அதன் பிறகே அவர் அவனை அடிப்பதை நிறுத்துகிறார்.

இந்த வீடியோ எந்த நோக்கத்தில் எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை இருப்பினும் அந்த தாயின் செயல் போல் ஒவ்வொருவரும் ஆண் பிள்ளைகளின் தவறினை சிறுவயதிலேயே தண்டித்தால் அது நிச்சயம் பல குற்றங்களுக்கு தீர்வாக அமையும் என்று பாராட்டு தெரிவித்துள்ளனர்.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

இதையும் படிக்க:  வேறு எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு அவமானம் நிகழ்த்திருக்காது திமுக ஆரம்பித்துவைத்ததை சிறப்பாக ராகுலுக்கு திருப்பி கொடுத்த தமிழகம்
Loading...