தேர்தல் நேரத்தில் பகுத்தறிவு எங்கே போனது விளாசிய -தங்கர்பச்சான்

நாத்திகர் ஸ்டாலின் பெரியாரை கும்பிட்டு பிரச்சாரத்தை ஏன் தொடங்கவில்லை தேர்தல் நேரத்தில் பகுத்தறிவு எங்கே போனது -தங்கர்பச்சான் கேள்வி

தேனி

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் மாவட்டத்தில் பிள்ளையாரை கும்பிட்டு தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

இதுகுறித்து கேள்வி எழுப்பிய பெரியாரிஸ்ட்டான கொளத்தூர் மணி மத சார்பற்ற நாட்டின் முதலமைச்சர் எப்படி பிள்ளையாரை கும்பிடலாம் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குனரும் நடிகருமான தங்கர்பச்சான் கேள்விகளை எழுப்பியிருந்தார் அதில் நாட்டில் கடவுளை வணங்குபவர்களை விட நாத்திகவாதிகள்தான் தற்போது அதிகம் வேசம் போடுகிறார்கள்.

தான் நாத்திகவாதி என்கிறார்கள் ஆனால் தனது குடும்பத்து பெண்கள் கடவுளை வணங்கினால் தவறில்லை என்கிறார்கள் இது என்ன நியாயம்?

இதையும் படிக்க:  ட்விட்டரில் ட்ரெண்டிங்கிற்கு தயாராகும் #கற்பழிப்புதிமுக ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா கனிமொழி போராடுவாரா என கேள்வி?

கடவுள் நம்பிக்கை உள்ளது என்று நம்பும் எடப்பாடி பிள்ளையாரை கும்பிட்டு பிரச்சாரத்தை தொடங்கினால், நாத்திகரான ஸ்டாலின் பெரியாரை கும்பிட்டு அவர் கொள்கைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டியதுதானே.

அப்படி செய்யமாட்டார்கள் தேர்தல் வந்துவிட்டால் தங்கள் நாத்திகத்தை ஓரம் கட்டிவிட்டு மதவாதம் பேச ஆரம்பித்துவிடுவார்கள் முதலில் போலி பக்தியும், நாத்திகமும் என்று ஒழிகிறதோ அன்றே தமிழகத்திற்கு நல்லது என்று சாடிவிட்டார்.

ஆமா அவர் கேட்பது போல் கனிமொழி, ஸ்டாலின் உள்ளிட்டோர் பெரியார் பெயரை சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டியதுதானே?

©TNNEWS24

Loading...