வெளியானது உலகக்கோப்பைக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல் தமிழக வீரர்களுக்கு முக்கியத்துவம் !

வெளியானது உலகக்கோப்பைக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல் தமிழக வீரர்களுக்கு முக்கியத்துவம் !

இந்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மே மாதம் 30 ஆம் தேதி துவங்கவுள்ளது, அதற்கான வீரர்களின் பட்டியலை 3 -ஆவது நாடாக இன்று வெளியிட்டது இந்தியா.

இதற்கு முன்னர் நியூசிலாந்து அணி வீரர்களின் பட்டியலை வெளியிட்ட நிலையில் இன்று காலை ஆஸ்திரேலிய அணி பட்டியலை வெளியிட்டது.

இந்த நிலையில் தான் இந்திய அணி இப்போது மும்பையில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பட்டியலை வெளியிட்டது

அதில்

கோலி

ரோஹித் சர்மா

ஷிகர் தவான்

தோனி

கே எல் ராகுல்

தினேஷ் கார்த்திக்

கேதார் ஜாதவ்

இதையும் படிக்க:  இதுதான் உண்மையான மாட்டுப்பொங்கல் மாட்டிற்கு கேக் வெட்டி கொண்டாடிய குடும்பத்தார் video உள்ளே

விஜய் ஷங்கர்

ஹர்டிக் பாண்டிய

ஜடேஜா

பும்ரா

புவனேஸ்வர் குமார்

மொஹம்மத் ஷமி

குலதீப் யாதவ்

சஹால்

ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் அனைவரும் மிகவும் எதிர்பார்த்த அம்பதி ராயுடு அணியில் இடம்பெறவில்லை அதேபோல ரிஷாப் பண்டும் அணியில் இடம்பெறவில்லை.

இந்த முறை உலககோப்பைக்கு தமிழக வீரர்கள் யாரும் இல்லாத அணி செல்லும் என்று பலரும் கூறிவந்த நிலையில் 2 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஒருவர் இளம் ஆள் ரவுண்டர் விஜய் ஷங்கர் மற்றொருவர் அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்.

தமிழக வீரர் அஸ்வின் அணியில் இடம்பெறாதது தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமளித்தாலும் , 2 தமிழக வீரர்கள் அணியில் ஆடுவது தமிழக ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:  சீமான் பாரதி ராஜாவை விளாசிய கஸ்தூரி!

©TNNEWS24

Loading...