ரஜினி அரசியலுக்கு வருகிறாரா இல்லையா? சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு!!!!
ரஜினி அரசியலுக்கு வருகிறாரா இல்லையா? சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு!!!!
கொரோனா பரவல் காரணமாகவும், உடல் நலம் கருதியும் நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சி துவக்க மாட்டார் என, சமூக வலைதளங்களில் அவரின் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கைக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மறுத்த ரஜினிகாந்த், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில தகவல்கள் உண்மையானவை என ரஜினிகாந்த் விளக்கமளித்தார்.

இதனால், ரஜினி கட்சி துவக்குவாரா மாட்டாரா என்ற கேள்வி, அரசியல் வட்டாரங்களில் எழுந்தது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக, அரசியல் நிலைப்பாடு குறித்து, மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவை அறிவிப்பேன் என டுவிட்டர் வாயிலாக, ரஜினி தெரிவித்திருந்தார்.
அதன்படி, சென்னை, கோடம்பாக்கம், ராகவேந்திரா திருமண மண்டபத்தில், மக்கள் மன்ற மாவட்ட செயலர்களுடன், ரஜினி இன்று ஆலோசனை நடத்தினார் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க போயஸ் இல்லத்தில் இருந்து புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்திற்கு வீட்டு முன் திரண்டு இருந்த ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ராகவேந்திரா மண்டபம் வருகை தந்த ரஜினிகாந்த் உடனடியாக மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனையை தொடங்கினார். 37 மாவட்ட செயலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனை சரியாக நண்பகல் 12 மணிக்கு முடிவு பெற்றது, ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களுடன் தனி தனியாக ஆலோசனை நடத்திய ரஜினி கட்சி தொடங்குவது குறித்து ஜனவரியில் அறிவிப்பு வெளியாகும்.
ஆனால் அதற்கு முன்னர் நீங்கள் உங்கள் பகுதிகளில் கள பணிகளை மேற்கொள்ளுங்கள், கட்சி தொடங்குவது, பரப்புரை மேற்கொள்வது என அனைத்தையும் நான் பார்த்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார், ஆனால் யாரிடமும் கட்சி தொடங்கமாட்டேன் என்றோ கட்சி தொடங்குவேன் என்றோ ஒற்றை வரியில் ரஜினி பதில் அளிக்கவில்லை.
ஆனால் கூட்டத்தில் கலந்து கொண்டு வெளியே வந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு இன்று மாலை அல்லது நாளை ரஜினி தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என தெரிவித்துள்ளனர். இராமநாதபுரம் ரஜினி மாவட்ட செயலாளர் செந்தில் என்பவர் ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்த அறிவிப்பை இன்று மாலை ரஜினி வெளியிடுவார் அதனை நீங்களும் பார்க்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
அதன் படி போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினேன், என்ன முடிவு எடுத்தாலும் கட்டுப்படுவதாக தெரிவித்துள்ளனர், விரைவில் அரசியல் பிரவேசம் குறித்த எனது முடிவை உடனடியாக அறிவிப்பேன் என்று இன்று அறிவித்துள்ளார்.
ரஜினியின் பேச்சு அவர் குறித்த அனைத்து செயல்பாடுகளும் முன்னணி ஊடகங்கள் மட்டுமல்லாமல், சமூக வலைத்தளங்களிலும் எகிறி வருகின்றன, ரஜினியால் அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்று கூறிய பலருக்கு தனது ஒரே ஆலோசனை கூட்டம் மூலம் எகிறி அடித்துள்ளார் ரஜினி.