நீங்கள் திமுகவில் இணைய போகிறீர்களா என கேள்வி எழுப்பிய நிருபர் அழகிரி கொடுத்த அடிபடும் பதில்!!
நீங்கள் திமுகவில் இணைய போகிறீர்களா என கேள்வி எழுப்பிய நிருபர் அழகிரி கொடுத்த அடிபடும் பதில்!!
முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில் கொடுத்தார், நிருபர் உங்கள் மகன் துரை தயாநிதிக்கு திமுகவில் பொறுப்பு கொடுக்க இருப்பதாக கூறுகிறார்கள் உண்மையா என கேள்வி எழுப்பினர், அதற்கு பதில் அளித்த அழகிரி அவ்வாறு யார் உங்களிடம் கூறியது என பதில் கேள்வி எழுப்பினார், பேச்சு அடிபடுகிறதே என நிருபர் கூற அது அடிபட போகும் பேச்சுதான் என காட்டமாக பதில் அளித்தார்.

நான் அமிட்ஷாவை பார்க்க போவதாகவும்தான் வதந்தியை பரப்பினீர்கள் என பாய்ந்தார்,மேலும் எனது ஆதரவாளர்களை கூட்டி ஆலோசனை செய்து அதன் பிறகே முடிவை அறிவிப்பேன் எனவும் தெரிவித்தவர் நிச்சயம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு இருக்கும் என அழகிரி அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார்.
அழகிரியின் பேச்சில் இருந்து மீண்டும் அழகிரி திமுகவில் சேரப்போவதாக வெளியான தகவல் என்பது வதந்தி என்பது தெளிவாக தெரியவந்துள்ளது, அழகிரி மீண்டும் களத்தில் இறங்கினால் அது திமுகவின் வாக்குகளை பிரிக்க பயன்படும் என்பதாலும் பல தொகுதிகளில் தேர்தல் முடிவுகள் வாக்கு வித்தியாசம் 1000 வாக்குகளுக்கு குறைவாக இருக்கும் என்பதால் அழகிரி வருகை திமுகவிற்கு பாதகத்தை உண்டாக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
தமிழக தேர்தல் களத்தில் அடுத்தடுத்து ரஜினி, அழகிரி என நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.