பாமக நடத்திய போராட்டம் எவ்வாறு பாஜகவிற்கு உதவ போகிறது? குமாரசாமி வரிசையில் அன்புமணி?

பாமக நடத்திய போராட்டம் எவ்வாறு பாஜகவிற்கு உதவ போகிறது? குமாரசாமி வரிசையில் அன்புமணி?

பாமக இளைஞர் அணி அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நேற்று சென்னையின் பல பகுதிகளில் வன்னியர் சமுதாயத்திற்கு தனியாக 20% இட ஒதுக்கீடு தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி போராட்டம் நடைபெற்றது, இதனால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து சம்பித்தது.

பாமக நோக்கம் என்ன?
ஒவ்வொரு கட்சிகளுக்கும் தங்களுக்கு என்று வலுவான வாக்கு வங்கியை தக்கவைத்து கொள்ள /உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கும் அந்த வகையில், ஜெயலலிதா, கருணாநிதி என இருவரும் இல்லாத நிலையில் வருகின்ற முதல் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள, பாமக வன்னியர் ஒட்டு வன்னியர்களுக்கே அதாவது வன்னியர்களின் அடையாளமாக இருக்கின்ற தங்களுக்கே வரவேண்டும் என எண்ணுகிறது.அதன் வெளிப்பாடாக இப்போது வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு என்ற போராட்ட களத்தில் பாமக இறங்கியுள்ளது.

பாமக தற்போது போராட வேண்டிய தேவை என்ன?
தமிழக அரசியல் எப்போதும் எந்த கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை காட்டிலும் எந்த கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என வாக்களிப்பவர்களே அதிகம், 2011,2016 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்ற ரீதியில் வாக்களித்தனர்,2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிராக வாக்குகள் விழுந்தன.

இதன் காரணம் எதிர்ப்பு அரசியலே தமிழகத்தில் வெல்லும் என்று அறிந்து கொள்ளலாம் வழக்கமாக வட மாவட்டங்களில் பாமக vs விசிக என்று இருந்த அரசியல் மோதல் ராமலிங்கம் படுகொலை, திரௌபதி திரைப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியபோது பாஜக ஆதரவு என வன்னியர் சமுதாய ஆதரவு நிலைப்பாடு பாஜக எடுத்ததால் மெல்ல பாஜக பக்கம் வன்னியர்கள் வாக்குகள் திரும்பின.

திமுக ஆதரவு வன்னியர்கள் திமுக பக்கம் நிற்க, திமுகவை எதிர்க்க கூடிய இடத்தில் இருக்கின்ற வன்னியர்கள் அதாவது அதிமுக, பாமக சார்புள்ள வன்னியர்கள் பாஜக பக்கம் தங்களை இணைத்து கொண்டனர், இதனால் பல கூட்டங்களில் மறைமுகமாக அன்புமணி நமக்கு ஒரே தலைவர் ஐயா ராமதாஸ் மட்டும்தான் என குறிப்பிட்டு வந்தார். இதையடுத்துதான் மத ரீதியாக ஒன்றிணைவதை காட்டிலும் சாதிரீதியாக உடனடியாக வன்னியர்களை ஒன்றிணைக்க வாய்ப்புகள் அதிகம் என்பதால் இட ஒதுக்கீடு போராட்டத்தை கையில் எடுத்துள்ளது பாமக.

பாமாவிற்கு கிடைத்தது என்ன?
நேற்றைய பாமக போராட்டம் வன்னியர் சமுதாயத்தை ஆதரவாக கொண்டு நடைபெற்றதால், மாற்று கட்சியில் உள்ள அதிமுக, திமுக, பாஜக, தேமுதிக என பலரும் பாமகவை விமர்சனம் செய்வதை தவிர்த்து சிலர் வன்னியர் சமுதாயத்தையும் விமர்சனம் செய்ய தொடங்கிவிட்டனர், இதைத்தான் பாமக எதிர்நோக்கி இருந்தது, வன்னியர்களின் ஆதரவாளர்கள் என அடையாளப்படுத்தி கொள்ள பாமக நினைத்த காரியம் நேற்று வெற்றியில் முடிந்தது.

பல பாஜகவை சேர்ந்த வன்னியர் கூட, பாமாகவிற்கு ஆதரவாகவும் பாஜகவிற்கு எதிராகவும் சில கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் எடுத்து சொல்ல ஆரம்பித்துவிட்டனர், இந்த வகையில் பாமக தங்கள் வாக்கு வங்கி பாஜகவிற்கு செல்வதை தடுத்ததுடன் மீண்டும் தங்கள் பக்கம் திருப்பியுள்ளது அத்துடன் ஊடக கவனத்தையும் பாமக பக்கம் திருப்பியுள்ளது அந்த வகையில் இது பாமாவிற்கு கிடைத்த வெற்றிதான்.

பாஜகவிற்கு கிடைக்கப்போகும் லாபம் என்ன?
இந்தியாவில் சாதி அரசியல் செய்த எந்த கட்சியும் இதுவரை வீழ்ச்சியை சந்திக்காத வரலாறே இல்லை அதற்கு முக்கிய சமீபத்திய உதாரணங்கள் கர்நாடகாவில் குமாரசாமி, உத்திர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ், பிகாரில் லல்லு பிரசாத், இவர்கள் எல்லாம் முதல்வர்களாக அமர்ந்த நிலையிலும் கூட தங்கள் சமுதாயத்திற்கு எந்த பலனையும் தராமல் தங்கள் குடும்பத்தை மட்டுமே வலுப்படுத்தி கொண்டதால் அதே சமூகத்தலாலே வீழ்த்தபட்டவர்கள்.

பாமகவின் நேற்றைய போராட்டம் வன்னியர்கள் வாக்குகளை ஒன்றிணைக்க உதவியது என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் மறுபக்கம், மற்ற சமுதாய மக்கள் வாக்குகளை பாமாவிற்கு எதிராக திருப்பியுள்ளது, குறிப்பாக பெரும்பான்மை சாதிகள் தவிர்த்து இடை நிலை சாதியர்களாக உள்ள விஷ்வகர்மா, யாதவர்கள், பிள்ளைமார், முத்தரையர்,உடையார்கள், வல்லம்பர்கள், செட்டியார், வண்ணார், குயவர்கள் இதுபோன்ற 16 சாதிகளின் எதிர்காலம் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கிடைத்தால் என்ன ஆகும் என்ற கேள்வி அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இவர்கள் இனி திமுகவிற்கு வாக்கு அளிப்பார்களா என்பது சந்தேகமே காரணம் திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுப்போம் என வாக்குறுதி அளித்துள்ளது, ஆக உத்திர பிரதேசம், பீகார், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பெரும்பான்மை சமுதாயமாக அடையாளப்படும் யாதவர்கள் தவிர்த்து(ஒருபகுதி ) மற்ற சமுதாயங்கள் எவ்வாறு பாஜகவிற்கு வாக்கு அளித்ததோ அதே வகையில் தங்கள் இருப்பை காப்பாற்றி கொள்ள இந்த சமூகங்கள் பாஜகவை நோக்கி செல்ல அதிக வாய்ப்புகள் 2024 -ம் ஆண்டிற்குள் உருவாகும்.

வன்னியர்களுக்கு 20 % இட ஒதுக்கீடு சாத்தியமா என்றால் அதற்கு 90% வாய்ப்பு இல்லை காரணம் வன்னியர்களுக்கு கொடுத்தால் முக்குலத்தோர், கொங்கு வேளாளர்கள், நாடார்கள், தலித்துகள் என அனைத்து தரப்பும் எங்களுக்கும் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என நிச்சயம் களத்தில் இறங்கும், இது போக கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் தனியாக ஒரு போராட்ட களத்தில் இறங்க வாய்ப்புகள் அதிகம்.

பாமக நடத்தும் போராட்டம் இட ஒதுக்கீடு ரீதியாக வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றாலும் அது அரசியல் ரீதியாக வருகின்ற சட்டசபை தேர்தலில் வாக்குகளை அதிகம் பெற உதவும் அதேநேரத்தில் இடைநிலை சாதிகள் தங்கள் இருப்பை காப்பாற்றி கொள்ள பாஜகவை நோக்கி நகர்வதை காட்டிலும் அவர்களுக்கு வேறு வழியில்லை காரணம் இதுவரை திராவிட கட்சிகள் ஆட்சியில் இடைநிலை சாதிகள் பயன்பெற்ற வரலாறே இல்லை. மொத்தத்தில் வன்னியர்கள் வாக்கை பாமக தக்கவைக்கவும் இடைநிலை சாதிகள் தங்கள் இருப்பை காப்பாற்றி கொள்ள பாஜகவை நோக்கி நகரவும் இட ஒதுக்கீடு போராட்டம் பிள்ளையார் சுழி போட்டுள்ளது. (சிறப்பு கட்டுரை M.S உதயகுமார் TNNEWS24.)

அதிமுக திமுக இரண்டு கட்சிகளும் பெரும்பான்மை பெறாத போது வன்னியர் பெல்ட்டுகளில் பாமக வெற்றி பெற்று குமாரசாமி வரிசையில் ஏதாவது ஒருகட்சி உதவியுடன் ஆட்சியை பிடிக்கலாம் என பாமக வைத்துள்ள மற்றொரு கணக்கு குறித்து அடுத்த TNNEWS24 தலையங்கத்தில் சிறப்பு கட்டுரை வெளியாகிறது மறக்காமல் பலோவ் செய்து இணைந்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami