புரெவி புயல்- இன்றிரவு 7 மணி முதல் பேருந்துகளுக்கு தடை
புரெவி புயல்- இன்றிரவு 7 மணி
முதல் பேருந்துகளுக்கு தடை
புரெவி புயல் முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக, கொடைக்கானல்
மலைப்பகுதிக்கு இன்றிரவு 7 மணி முதல்
பேருந்துகள் மற்றும் வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

வத்தலக்குண்டு,
பழனி, அடுக்கம் சாலையில் மறு உத்தரவு
வரும் வரை, சுற்றுலா பயணிகள், உள்ளூர்
மக்களின் வாகனங்கள் அனுமதிக்கப்படாது
என்று சார் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நாளை மறுநாள் பேருந்து ஓடாது…
டிச.5ஆம் தேதி நாடு முழுவதும்
போராட்டம் – அறிவிப்பு
டிசம்பர் 5ஆம் தேதி நாடு முழுவதும்
பிரதமர் மோடியின் உருவ பொம்மையை
எரித்து போராட்டம் நடைபெறும் என்று
போராட்டம் நடத்தும் விவசாயிகள்
அறிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு
நாடு முழுவதும் உள்ள விவசாயிகள்,
தொழிற்சங்கங்கள், மாணவர்கள்,
இளைஞர்கள், அரசியல் கட்சியினர்
ஆதரவு அளித்துள்ளதால், டிச.5இல்
தேதி பேருந்து, ரயில் போன்ற பொது
போக்குவரத்து முற்றிலும் முடங்கும் நிலை
ஏற்பட்டுள்ளது.
டாக்டர் இராஜேந்திரப் பிரசாத்
பிறந்தநாள் இன்று
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும்,இந்திய விடுதலைப் போராட்ட வீரருமான டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் பிறந்த தினம் இன்று.
இரு முறை குடியரசுத்
தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட
ஒரே தலைவர் என்ற பெருமைக்குரியவர்.
இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள்
டிவிட்டரில் மரியாதை செலுத்தி
வருகின்றனர். மேலும், #PresidentofIndia
டிரெண்டிங்கில் உள்ளது.
.