JUST IN:புயலால் தொடர் மழை… தமிழகத்திற்கு பெரும் எச்சரிக்கை!
JUST IN:புயலால் தொடர்
மழை… தமிழகத்திற்கு பெரும்
எச்சரிக்கை!
புயல் காரணமாக பெய்த தொடர்
மழையால் சென்னை மக்களின் குடிநீருக்கு ஆதாரமாக உள்ள நீர் தேக்கங்களில் ஏறத்தாழ 90% நிறைந்துவிட்டன.

இந்நிலையில் வரும் 5ஆம் தேதி வரை
மழையின் தீவிரம் இருந்தால் பெரும்
பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய
நீர்வள ஆணையம் எச்சரித்துள்ளது.
மேலும் நீர்நிலைகளை கண்காணிக்கவும்,
தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு
முன்னறிவிப்பு கொடுக்கவும் தமிழக
அரசை அறிவுறுத்தியுள்ளது.
Breaking: 6 மாவட்டங்களுக்கு
விடுமுறை – தமிழக அரசு
அறிவிப்பு!
புரெவி புயல் காரணமாக
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
குமரி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம்,
விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 6
மாவட்டங்களுக்கு நாளை அரசு
பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக கனமழை பெய்யும் என்பதால்
பொதுமக்கள் வெளியே செல்லாமல்,
பாதுகாப்பாக இருக்கும்படி அரசு
அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தை
நெருங்கியுள்ள புயல் இன்றிரவு
அல்லது நாளை அதிகாலை பாம்பன்
அருகே கரையை கடக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
justIn: பிரபல தமிழ்
நடிகையிடம் கைவரிசை…
அய்யோ OMG!
நடிகை வரலட்சுமி சரத்குமாரின் சமூக
வலைதளப் பக்கங்களை விஷமிகள் ஹேக் செய்துவிட்டனர். இதனால், தனது சமூகவலைதளப் பக்கத்தில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்று வரலட்சுமிஅறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தன்னுடைய கணக்குகளை மீட்பதற்காக
அந்தத் தளங்களின் அதிகாரிகளுடன்
பேசி வருவதாகவும், கூடிய
விரைவில் மீட்கப்பட்டு விடும் என்றும்
தெரிவித்துள்ளார்.
.