JustIn: ‘கடும் குளிரில் வீதியில் கிடந்து’ – உருகிய நடிகர் கார்த்தி
JustIn: ‘கடும் குளிரில் வீதியில்
கிடந்து’ – உருகிய நடிகர் கார்த்தி
மத்திய அரசின் வேளாண்
மசோதாக்களுக்கு எதிர்ப்பு
தெரிவித்து டெல்லியில் போராடி
வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக
நடிகர் கார்த்தி குரல் கொடுத்துள்ளார்.

“டெல்லி குளிரையும் பொருட்படுத்தாமல்
வீதியில் கிடந்து போராடும் விவசாயிகளின் குரலுக்குச் செவி சாய்த்து, அவர்கள்கோரிக்கைகளைப் பரிசீலித்து, உழவர்கள் சுதந்திரமாகத் தொழில் செய்வதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.அரசு தாமதிக்காமல் இதை வேண்டும் என வலியுறுத்துகிறோம்” என டுவீட் செய்துள்ளார்.
தமிழகத்தில் வேலை…)
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும்
காகித நிறுவனத்தில் காலியாக உள்ள
பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
பணி: Plant
Engineer & Assistant Manager.
காலிப்பணியிடங்கள்: 33. பணியிடம்
சென்னை. கல்வித்தகுதி: B.E, B.Tech, Arts /
Science Degree. சம்பளம்: ரூ. ரூ.85,132 –
ரூ.1,02,700. வயது: 28 – 40. விண்ணப்ப
கட்டணம் இல்லை. விண்ணப்பிக்க கடைசி
தேதி டிச.,18. மேலும், விவரங்களுக்கு
www.tnpl.com என்ற இணையதளத்தை
பார்க்கவும்.
தடை நீங்கியது… ‘கன்னிராசி’
நாளை வெளியீடு!
விமல், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில்
உருவாகி இருக்கும் கன்னிராசி
படத்திற்கான தடை நீங்கியதால், நாளை
முதல் ரிலீசாக இருப்பதாக படக்குழு
அறிவித்துள்ளது.
இப்படத்தின் கர்நாடக
உரிமையா வாங்கியுள்ள ‘மீடியா
டைம்ஸ்’ நிறுவனத்திற்கும், இப்படத்தின்
தயாரிப்பு நிறுவனமான கிங் மூவி
மேக்கர்ஸ் நிறுவனத்திற்கும் விநியோக
உரிமையில் பிரச்சனை ஏற்பட்டு தடை
வழங்கப்பட்டது. தற்போது சுமூக முடிவு
எடுக்கப்பட்டுள்ளது.
.