மதுரை மாநாட்டில் ரஜினி தலைமையில் இணையும் மூன்று முக்கிய அரசியல் பிரமுகர்கள்!! கடும் ஷாக்!!!
மதுரை மாநாட்டில் ரஜினி தலைமையில் இணையும் மூன்று முக்கிய அரசியல் பிரமுகர்கள்!! கடும் ஷாக்!!!
நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து மதுரையில் ரஜினி ரசிகர்கள். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2017 டிசம்பரில் நடிகர் ரஜினிகாந்த், ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என அறிவித்தார்.
ஆனால், அதன்பின்னர் கட்சி நடவடிக்கைகளில் ஏதும் இறங்கவில்லை. மக்களவைத் தேர்தலில் கூட மவுனமாகவே இருந்தார்.
இந்நிலையில், கடந்த வாரம், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனைக்குப் பின்னர் போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது அரசியல் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பதாகக் கூறினார்.

இந்நிலையில், இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் தனது முடிவை ரஜினி தெரிவித்துள்ளார். அதில் ஜனவரியில் கட்சி தொடங்க உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு டிச.31 அன்று வரும் என்றும் தெரிவித்துள்ளார்.அதன் பிறகு கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனா மூர்த்தி என்பவரையும் ரஜினி நியமனம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் டிசம்பர் 31 அன்று கட்சியின் பெயரை அறிவிக்கும் ரஜினி அதன் பிறகு மதுரையில் முதல் அரசியல் மாநாட்டை நடத்த இருக்கிறார், முதல் மாநாட்டில் கட்சியின் கொடியை அறிமுகம் செய்வதுடன் நிர்வாகிகள் பட்டியலும் அவர் வெளியிடுகிறார். என்று கூறப்படுகிறது, தற்போது ரஜினியின் தலைமையில் முக. அழகிரி, கராத்தே தியாகராஜன், சைதை துரைசாமி ஆகியோர் இணைய இருப்பதாகவும், அழகிரி தனி கட்சி தொடங்கி ரஜினியுடன் கூட்டணி வைப்பதா இல்லை, கட்சியில் இணைவதா என தனது ஆதரவாளர்களை கூட்டி ஆலோசனை நடத்த இருக்கிறாராம்.
மேலும் ரஜினியின் கட்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தேமுதிக, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, செ.கு.தமிழரசனின் இந்திய குடியரசு கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணி வைக்கலாம் எனவும் கூறப்படுவதால் இந்த சட்டமன்ற தேர்தல் திமுகவிற்கு எதிராக மிக பெரிய சவாலை கொடுக்கலாம் என கூறப்படுகிறது.
எங்களது செய்திகள் உடனடியாக உங்களை வந்து அடைய வேண்டுமா?