தூத்துக்குடி மக்களுக்கு எச்சரிக்கை
தூத்துக்குடி மக்களுக்கு
எச்சரிக்கை
புரெவி புயல் முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக, தூத்துக்குடியில் மாலை
6 மணி முதல் மக்கள் யாரும் வீடுகளை
விட்டு வெளியே வரவேண்டாம்
என்று அம்மாவட்ட ஆட்சியர் செந்தில்
ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

கடற்கரை,
நீர்நிலைகள் அருகில் செல்லவேண்டாம்,
பாதுகாப்பற்ற வீடுகளில் வசிக்கும் மக்கள்
நிவாரண முகாம்களுக்கு செல்லுங்கள்
என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விவசாயிகளுக்கு துரோகம்
இழைக்காதீர்கள்!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக
பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட
ஆறு மாநில விவசாயிகள் டெல்லி
எல்லைகளில் தொடர்ந்து போராட்டம்
நடத்தி வருகின்றனர். இன்றுடன்
இந்தப் போராட்டம் 8வது நாளை
எட்டியுள்ளநிலையில் அரசு 4ம் கட்டப்
பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
இந்நிலையில், “வேளாண் சட்டங்களை
ரத்து செய்யாவிட்டால் அது
விவசாயிகளுக்கும் இந்தியாவிற்கும்
செய்யும் துரோகம்” என ராகுல் காந்தி
விமர்சித்து ட்வீட் செய்துள்ளார்.
BIG ALERT: மிக அருகில் வந்தது
புரெவி புயல்…. தப்பிச்சிடுங்க!
திரிகோணமலைக்கு வடக்கே கரையைக்
கடந்த புரெவி புயல் பாம்பனுக்கு மிக
அருகே நிலைகொண்டுள்ளதாகவும்
இன்றிரவு அல்லது நாளை காலை பாம்பன்
- கன்னியாகுமரி இடையே புயல் கரையை
கடக்கும் என்றும் வானிலை ஆய்வு
மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3
மணி நேரத்தில் பாம்பனுக்கு குறுக்கே
புயல் நகரும்போது 90 கி.மீ வேகத்தில்
காற்று பலமாக வீசும் என்பதால் மக்கள்
பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல
எச்சரித்துள்ளது.