ஆஸி.,வுக்கு 162 ரன்கள் இலக்கு!
ஆஸி.,வுக்கு 162 ரன்கள் இலக்கு!
கான்பெரா நகரில் ஓவல் மைதானத்தில்
நடைபெற்று வரும் ஆஸி.,வுக்கு எதிரான
முதல் டி20 போட்டியில் இந்திய அணி
20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து
161 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணி
சார்பில் அதிகபட்சமாக கே.எல். ராகுல் 51,
ஜடேஜா 44 ரன்கள் எடுத்தனர். ஆஸி.,
அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய
மொய்சஸ் ஹென்ரிக்ஸ் 3, ஸ்டார்க் 2
விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
டிசம்பர் 4: மறக்க முடியாத நாள்
1971-ம் ஆண்டு நடந்த இந்திய –
பாகிஸ்தான் போரில், இந்தியாவின்
மாபெரும் வெற்றிக்கு அடித்தளமாக
அமைந்தது டிச.4-ம் தேதி பாகிஸ்தானின்
கராச்சி துறைமுகத்தின் மீது இந்திய
கடற்படை நடத்திய ஆப்பரேஷன்
டிரைடன்ட் என்ற தாக்குதல்,
இதில் அங்கிருந்த 4 கப்பல்கள்
மூழ்கடிக்கப்பட்டன.
இந்திய தரப்பில்
எந்த சேதமும் இல்லை. இந்த வெற்றியை
அடையாளப்படுத்தும் வகையில் டிச.
4 ஆண்டுதோறும் கடற்படை தினமாக
கொண்டாடப்பட்டு வருகிறது.
நடிகர் ரஜினியிடம் இருந்து
என்னை பிரிக்க சதி- பரபரப்பு
நடிகர் ரஜினியிடம் இருந்து தன்னை
பிரிக்க சதி நடப்பதாக தமிழருவி
மணியன் சற்றுமுன் குற்றம் சாட்டியுள்ளது
அரசியலில் புதிய பரபரப்பை
கிளப்பியுள்ளது. ரஜினி முதல்வர்
வேட்பாளரா? இல்லையா? என்பது பற்றி
நான் எந்த ஊடகத்திடமும் பேசவில்லை
எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
ரஜினி கட்சியில் மேற்பார்வையாளராக
நியமிக்கப்பட்ட மறுநாளே இவ்வாறு
குற்றம் சாட்டியது ரஜினியின்
ஆதரவாளர்களிடையே குழப்பத்தை
ஏற்படுத்தியுள்ளது.
Posted