டிசம்பர் 4: மறக்க முடியாத நாள்
டிசம்பர் 4: மறக்க முடியாத நாள்
1971-ம் ஆண்டு நடந்த இந்திய –
பாகிஸ்தான் போரில், இந்தியாவின்
மாபெரும் வெற்றிக்கு அடித்தளமாக
அமைந்தது டிச.4-ம் தேதி பாகிஸ்தானின்
கராச்சி துறைமுகத்தின் மீது இந்திய
கடற்படை நடத்திய ஆப்பரேஷன்
டிரைடன்ட் என்ற தாக்குதல்,
இதில் அங்கிருந்த 4 கப்பல்கள்
மூழ்கடிக்கப்பட்டன.

இந்திய தரப்பில்
எந்த சேதமும் இல்லை. இந்த வெற்றியை
அடையாளப்படுத்தும் வகையில் டிச.
4 ஆண்டுதோறும் கடற்படை தினமாக
கொண்டாடப்பட்டு வருகிறது.
நடிகர் ரஜினியிடம் இருந்து
என்னை பிரிக்க சதி- பரபரப்பு
நடிகர் ரஜினியிடம் இருந்து தன்னை
பிரிக்க சதி நடப்பதாக தமிழருவி
மணியன் சற்றுமுன் குற்றம் சாட்டியுள்ளது
அரசியலில் புதிய பரபரப்பை
கிளப்பியுள்ளது. ரஜினி முதல்வர்
வேட்பாளரா? இல்லையா? என்பது பற்றி
நான் எந்த ஊடகத்திடமும் பேசவில்லை
எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
ரஜினி கட்சியில் மேற்பார்வையாளராக
நியமிக்கப்பட்ட மறுநாளே இவ்வாறு
குற்றம் சாட்டியது ரஜினியின்
ஆதரவாளர்களிடையே குழப்பத்தை
ஏற்படுத்தியுள்ளது.
Posted
ரிசெர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு..
வட்டி குறைப்பு இல்லை- ஆர்பிஐ
ஆளுநர் அறிவிப்பு
குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ
வட்டி விகிதம் எந்த மாற்றமும் இல்லாமல்
4%ஆக தொடரும் என்று ரிசர்வ் வங்கி
ஆளுநர் சக்திகாந்த தாஸ் அதிரடியாக
அறிவித்துள்ளார்.
இதனால், வாகனம்
மற்றும் வீட்டு கடனுக்கான வட்டியில்
மாற்றம் இருக்காது. மேலும், 2021 இல்
நாட்டில் பொருளாதார வளர்ச்சி
7.5%ஆக இருக்கும். வளர்ச்சி நடப்பு
நிதியாண்டின் 3வது காலாண்டில் +0.1%,
4வது காலாண்டில் +0.7%ஆக இருக்கும்.
வருங்காலங்களில் நகர்ப்புறங்களில்
தேவை அதிகரிக்கும் எனவும்
தெரிவித்துள்ளார்.