உணவு, மருந்தாக அத்திப்பழம் !!
உணவு, மருந்தாக அத்திப்பழம் !!
உணவாகவும், மருந்தாகவும் பயன்படும்
பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. அத்தி
எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல்,
மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை
சுறுசுறுப்புடன் செயலாற்ற செய்கிறது.

தினசரி 2 பழங்களை சாப்பிட்டால்
உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில்
சத்துக்களும், வைட்டமின் ஏ, வைட்டமின்
சி அதிக அளவில் உண்டு.
ஆஸி.,வுக்கு 162 ரன்கள் இலக்கு!
கான்பெரா நகரில் ஓவல் மைதானத்தில்
நடைபெற்று வரும் ஆஸி.,வுக்கு எதிரான
முதல் டி20 போட்டியில் இந்திய அணி
20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து
161 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி
சார்பில் அதிகபட்சமாக கே.எல். ராகுல் 51,
ஜடேஜா 44 ரன்கள் எடுத்தனர். ஆஸி.,
அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய
மொய்சஸ் ஹென்ரிக்ஸ் 3, ஸ்டார்க் 2
விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
டிசம்பர் 4: மறக்க முடியாத நாள்
1971-ம் ஆண்டு நடந்த இந்திய –
பாகிஸ்தான் போரில், இந்தியாவின்
மாபெரும் வெற்றிக்கு அடித்தளமாக
அமைந்தது டிச.4-ம் தேதி பாகிஸ்தானின்
கராச்சி துறைமுகத்தின் மீது இந்திய
கடற்படை நடத்திய ஆப்பரேஷன்
டிரைடன்ட் என்ற தாக்குதல்,
இதில் அங்கிருந்த 4 கப்பல்கள்
மூழ்கடிக்கப்பட்டன.
இந்திய தரப்பில்
எந்த சேதமும் இல்லை. இந்த வெற்றியை
அடையாளப்படுத்தும் வகையில் டிச.
4 ஆண்டுதோறும் கடற்படை தினமாக
கொண்டாடப்பட்டு வருகிறது.