ஹைதராபாத் பெயர் மாறுகிறது வெற்றியின் விளிம்பில் பாஜக.. முஸ்லீம் பெண்கள் வாக்கையும் அள்ளியது!!

ஹைதராபாத் பெயர் மாறுகிறது வெற்றியின் விளிம்பில் பாஜக.. முஸ்லீம் பெண்கள் வாக்கையும் அள்ளியது!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மா நகராட்சியின் 150 வார்டுகளுக்கு கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 46.55 சதவீத வாக்குகள் பதிவாகின. இம்மாநிலத்தில் பாஜக வலுவாக காலூன்றும் வகையில் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலுக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்தது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் நேரடியாக வந்து வாக்கு சேகரித்தனர். அதேசமயம் மாநிலத்தை ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, ஹைதராபாத் மக்களவை தொகுதியை தன்வசம் வைத்துள்ள ஏஐஎம்ஐஎம் கட்சியும் வலுவான போட்டியை ஏற்படுத்தியது.

காலை 8.30 மணிக்கு தொடங்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை முதலே பாஜக ஆளும் கட்சியான TRS கட்சியை காட்டிலும் அதிக இடங்களில் முன்னிலை வகித்தது, தற்போது காலை 11.30 மணி நிலவரப்படி பாஜக -85, TRS – 37, AIMIM – 17, காங்கிரஸ் 02 இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர், பாஜக ஹைதராபாத் என்ற பெயரை பாக்யா நகர் என மாற்றுவோம் எனவும் ஹைதராபாத் என்ற பெயருக்கு முன்னாள் பாக்யாநகர் என்ற பெயரே இருந்ததாகவும் குறிப்பிட்டது.

இந்த தேர்தலில் பாஜக வெற்றிபெறும் பட்சத்தில் அதன்பெயர் பாக்கியநகர் என மாறுவது உறுதி, அதை தாண்டி பாஜகவை இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி என பிம்பம் படுத்திவந்த அரசியல் கட்சிகள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளன, காரணம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஓல்ட் ஹைதராபாத் வார்டுகளில் பாதிக்கு பாதி இடங்களை AIMIM எனும் ஒவைசி கட்சியிடம் இருந்தும் கைப்பற்றியுள்ளது.
முத்தலாக் சட்டம் கொண்டுவந்ததன் மூலம் இஸ்லாமிய பெண்கள் அதிக அளவில் பாஜகவிற்கு வாக்கு அளித்திருப்பதாகவும், அதன் வெளிப்பாடாகவே முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளிலும் பாஜக முன்னிலை வகிப்பதாக கூறப்படுகிறது.

மொத்தத்தில் தெலுங்கானா மாநிலம் மெல்ல மெல்ல பாஜகவிற்கு ஆதரவாக மாறிவருகிறது என்பதாக கூறப்படுகிறது. இது முன்னிலை நிலவரம்தான் எனவும் 6 மணிக்கு மேல்தான் உறுதியான முடிவுகள் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami