தமிழகமே கருப்புக் கடல் ஆகட்டும்!
தமிழகமே கருப்புக் கடல்
ஆகட்டும்!
வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராக
டெல்லியில் விவசாயிகள் தொடர்
போராட்டம் நடத்தி வரும் நிலையில்
திமுக தலைவர் ஸ்டாலின், “தமிழகமே
கருப்புக் கடல் ஆகட்டும்; டெல்லி போல
குலுங்கட்டும்.

வேளாண் சட்டங்களுக்கு
எதிராக விவசாயிகளின் உரிமை காக்கும்
ஆர்ப்பாட்டம் வெற்றி காணட்டும்” என்று
தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவை மிரட்டிய
நடராஜன்!
தமிழக வீரர் நடராஜனின் அசத்தலான
பந்துவீச்சின் உறுதுணையுடன்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல்
டி20 போட்டியில் இந்திய அணி
11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
பெற்றுள்ளது. பரபரப்பான ஆட்டத்தில்
மேக்ஸ்வெல், கிரீஸை வீழ்த்தி நடராஜன்
திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
இப்போட்டியில் 4 ஓவர்களில் மூன்று
விக்கெட்டுகளை எடுத்த அவர் 30
ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். முதல்
போட்டியே அவருக்கு மேட்ச் வின்னிங்
இன்னிங்சாக அமைந்துள்ளது.
Fostedia|
பேஸ்புக் மீது வழக்கு தொடர்ந்த
அமெரிக்க அரசு
அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு
நிறுவனமான பேஸ்புக் வெளிநாடுகளில்
இருந்து வந்த பணியாளர்களுக்கு அதிக
வேலைவாய்ப்புகளை வழங்கியதாகக்
குற்றம்சாட்டி அமெரிக்க அரசு
வழக்கு தொடர்ந்துள்ளது.
2018
ஜனவரி முதல் 2019 செப்டம்பர்
வரை 2600க்கு மேற்பட்ட
பணியிடங்கள் வெளிநாட்டவர்களுக்கு
வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு
நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
‘
.