எதிர்க்கட்சிகள் மீது அவதூறு பேசுவதை விடுத்து….
எதிர்க்கட்சிகள் மீது அவதூறு
பேசுவதை விடுத்து….
எதிர்க்கட்சிகள் மீது தேவையற்ற
அவதூறுகளைப் பேசுவதைத் தவிர்த்து,
ஆட்சியாளர்கள் ஆக்கப்பூர்வமான
நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன்,

புயல் பாதிப்புகள் குறித்து நேரடி ஆய்வு
செய்ய வருகை தந்துள்ள மத்திய
குழுவினரிடம் முழு நிலவரத்தையும்
எடுத்துச் சொல்லி, தேவையான நிவாரண
உதவியைப் பெற்றிட வேண்டும் என
மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஜெயலலிதாவின் சாதனைகள்!
தமிழகத்தின் முதல் பெண் எதிர்கட்சித்
தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்,
- முறை முதலமைச்சர் என இரும்பு
பெண்மணியாக இருந்தவரின் 4ம்
ஆண்டு நினைவு தினம் இன்று.
ஜெ.வின் திட்டங்களை பிற மாநில
அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து தங்கள்
மாநிலங்களில் சாத்தியப்படுத்தியது அவர்
செய்த முக்கிய சாதனை. மேலும், முதல்வர்
பதவியில் அதிக நாட்கள் இருந்த பெண்
என்ற பெருமைக்குரியவர்.
போராட்டம் நடத்த உரிமை
உள்ளது!
மக்களுக்கு அமைதியான முறையில்
போராட்டம் நடத்த உரிமை உள்ளது
எனவும் அவர்கள் அமைதி வழியில்
போராட அனுமதிக்க வேண்டும் எனவும்
விவசாயிகள் போராட்டம் குறித்து ஐநா
கருத்து தெரிவித்து உள்ளது.
டெல்லியில்
நடந்து வரும் விவசாயிகள் போராட்டம்
தற்போது சர்வதேச கவனத்தையும் ஈர்க்க
தொடங்கி உள்ளது.
.
.
.