விஜயை இயக்கப்போவது யார்?
விஜயை இயக்கப்போவது யார்?
மாஸ்டர் படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும்
65வது படத்தை நெல்சன் இயக்க
இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே பா.ரஞ்சித் விஜயை வைத்து
ஒரு சூப்பர் ஹீரோ கதை உருவாக்க
உள்ளதாக தெரிவித்த நிலையில்,
பாண்டிராஜ். அருண்ராஜா காமராஜ், அஜய்
ஞானமுத்து ஆகியோர் பெயர்களும்
வலம் வருகிறது.

இந்நிலையில் விஜயை
சூப்பர் ஹீரோவாக பார்க்க எதிர்பார்ப்புகள்
அதிகரித்துள்ளது.
BREAKING: தமிழக முதல்வர்
பழனிசாமி அதிரடி உத்தரவு!
புரெவி புயல், கனமழையால் இறந்த 7
பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்
வழங்க முதல்வர் ஈபிஎஸ் அதிரடியாக
உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும்,
புயல் மற்றும் மழையால் இறந்த மாடு
ஒன்றுக்கு ரூ.30,000, எருதுக்கு ரூ.25,000,
கன்றுக்கு ரூ.16,000, ஆடுக்கு ரூ.3,000
நிவாரண உதவி வழங்கப்படும் என்றும்
அறிவித்துள்ளார்.
உயர்நீதிமன்ற மதுரை கிளை
அதிரடி உத்தரவு
தமிழகத்தில் உள்ள 33 கொரோனா
சித்தா சிகிச்சை மையங்களில் ஆக்சிஜன்
வசதியை உடனே ஏற்படுத்த வேண்டும்
என்று மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற
மதுரை கிளை அதிரடியாக உத்தரவு
பிறப்பித்துள்ளது.
கோயில்களில் சித்த
மருத்துவமனை அமைக்க கோரிய
வழக்கில், சித்த மருத்துவத்தில்
வருங்காலத்தில் ஊசி போட ஏற்பாடு
செய்யப்பட்டு வருவதாக நீதிமன்றத்தில்
மத்திய அரசு புதிய தகவலை
தெரிவித்துள்ளது.
.
.