ஏன் விசிகவில் இணைந்தேன் விளக்கம் கொடுத்த விக்ரமன் கடுப்பில் திமுகவினர்!!!

ஏன் விசிகவில் இணைந்தேன் விளக்கம் கொடுத்த விக்ரமன் கடுப்பில் திமுகவினர்!!!

பத்திரிகை துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த விக்ரமன் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார் இந்த நிலையில் அவர் ஏன் விசிகவில் இணைந்தேன் என விளக்கம் ஒன்றையும் கொடுத்துள்ளார் அதில் :-

ஜாதி ஒழிப்பையும், பெண்ணுரிமை மீட்பையும் அடிப்படை கொள்கையாகவே கொண்டுள்ள ஒரே கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மட்டுமே. மத்தியில் பாசிச ஆட்சியும் மாநிலத்தில் அதன் ப்ராக்ஸி ஆட்சியும் நடந்துகொண்டிருக்கும் இன்றைய ஆபத்தான காலகட்டத்தில், மதவாத ஜாதியவாத பாசிச சக்திகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றும் உறுதியான தலைவராக எழுச்சித்தமிழரை பார்க்கிறேன்.

சனாதன எதிர்ப்பு, மனுநீதி எதிர்ப்பில் சமரசமற்ற அவரின் செயல்பாடு நாடறிந்தது. இந்துத்துவத்தால் தின்று செறிக்கமுடியாத ஒற்றை தலைவராக அண்ணன் எழுச்சித்தமிழர் மட்டுமே இருக்கிறார். விளிம்புநிலை மக்களின் பாதுகாப்பு அரணாக திகழ்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. சமூகநீதிப்போரில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்கள் விடுதலைச் சிறுத்தைகள்.

பாசிசம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதனை மக்கள் மன்றத்தில் தோலுரித்து ஓட ஓட விரட்டும் சிறுத்தையாய், விடுதலைச் சிறுத்தையாய் நானும் களத்தில் இறங்குகிறேன். ஜனநாயகத்தின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள் அதனை பாதுகாக்க நினைப்பவர்கள் என்னை தொடர்ந்து கட்சியில் தங்களை இணைத்துக்கொள்வார்கள் என்று ஆணித்தரமாக நம்புகிறேன்.

அண்ணல் அம்பேத்கரின் பிள்ளையாய், தந்தை பெரியாரின் பேரனாய், அண்ணன் எழுச்சித்தமிழரின் அன்புத் தம்பியாய் ஜாதியை ஒழிக்க, சமூகநீதியை காக்க, பெண்ணுரிமையை மீட்க, சனாதனத்தை வேரறுக்க, பாசிசத்தை வீழ்த்த ‘சமத்துவம் காத்த செம்மல்’ புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளில் விடுதலைச் சிறுத்தையாய் என்னை இணைத்துக்கொள்வதில் பெருமையும் பெருமகிழ்ச்சியும் அடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் விக்ரமன் கருத்திற்கு சமூக வலைத்தளங்களில் பாஜக அதிமுகவினர் கிண்டல் செய்துவரும் நிலையில், திமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர், அதில் ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை கொண்ட ஒரே இயக்கம் விசிக மட்டுமே என குறிப்பிட்டுள்ளார் அப்படி என்றால் திமுகவில் ஜாதி அரசியல் இருக்கிறது என குறிப்பிடுகிறாரா? உங்களக்கு பிடித்த கட்சியில் நீங்கள் இணைவது உரிமை உங்கள் தலைவரை வாழ்த்துவதும் உரிமை அப்படி இருக்கையில் இந்துத்துவம் தின்று செரிக்க முடியாத ஒரே தலைவர் திருமாவளவன் மட்டும்தான் என கூறுவது நியாயமா? ஏன் எங்கள் கட்சி தலைவர் இந்துத்துவத்தை ஆதரிக்கிறாரா? நாடாளுமன்ற தேர்தலில் திமுக பிரச்சாரமே இந்துத்துவதையும் பாஜகவையும் எதிர்த்து இருந்தது அப்படி இருக்கையில் ஒரே தலைவர் என குறிப்பிடுவது சரியா என கடுமையாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami