என்ன நடக்க போகிறது உறுதியாக அடித்து கூறும் அண்ணாமலை இடைத்தேர்தல் வருகிறதா?
என்ன நடக்க போகிறது உறுதியாக அடித்து கூறும் அண்ணாமலை இடைத்தேர்தல் வருகிறதா?
தமிழகத்தில் 2011 சட்டமன்ற தேர்தல் 2014 நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றில் திமுக காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்க காரணமாக அமைந்தது அப்போதைய 2ஜி ஊழல் வழக்கு, திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறமுடியாமல் மிக பெரிய தோல்வியை சந்தித்தது.
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர், அதன் பிறகு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், சிபிஐ உரிய ஆவணங்களை தாக்கல் செய்யும் என்று காத்திருந்த போது முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அந்த வழக்கில் இருந்து குற்றவாளிகள் இருவரையும் விடுதலை செய்வதாக அறிவித்தார்.

அதன் பிறகு 2ஜி வழக்கில் மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது, அதனை ஏற்க கூடாது என கனிமொழி தரப்பு அளித்த மனுவை ஏற்க மறுத்த நீதிமன்றம், மீண்டும் 2ஜி வழக்கை விசாரிக்க தொடங்கியது இந்த வழக்கில் வருகின்ற ஜனவரி மாதத்தில் தீர்ப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலையிடம் முன்னணி தனியார் நாளிதழ் பேட்டி எடுத்தது அதில் 2ஜி வழக்கில் அனைவரும் விடுதலை ஆகிவிட்டதாக திமுக கூறுகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது ஆனால் தற்போது உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது, கலைஞர் டிவிக்கு 200. கோடி பணம் கைமாறுகிறது பின்பு பிரச்சனை வெளியில் தெரியவர அந்த பணத்தை மீண்டும் கலைஞர் tv திருப்பி கொடுக்கிறது, இது போன்று உறுதியான பல ஆதாரங்கள் இந்த வழக்கில் இருக்கின்றன.
எனவே குற்றவாளிகள் தப்ப வாய்ப்பு இல்லை, லல்லு பிரசாத் போன்று இவர்களும் சிறை செல்வது உறுதி எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 2ஜி வழக்கில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ராசா ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கினால் அவர்களது எம். பி பதவி பறிபோகும் எனவே இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது மேலும் பல்வேறு கேள்விகளுக்கு அண்ணாமலை அளித்த பேட்டியை பார்க்க –