அமேசானுக்கு அபராதம் விதிக்க வேண்டும்
அமேசானுக்கு அபராதம் விதிக்க
வேண்டும்
முன்னணி ஆன்லைன் விற்பனை
நிறுவனமான அமேசான் மீது
அமலாக்கத்துறை சிறப்பு இயக்குநரிடம்
அனைத்திந்திய வணிகர் சங்க கூட்டமைப்பு புகார் தெரிவித்துள்ளது.

அமேசான்
நிறுவனம் சட்டத்துக்கு முறைகேடாக ரூ.
48,500 கோடி முதலீடு செய்துள்ளதாகவும்,
அந்நிய செலாவணி விதிகளை
மீறியதற்காக ரூ.1.45 லட்சம் கோடி
அபராதம் விதிக்க வேண்டுமென்று புகார்
கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
தங்கம், வெள்ளி விலை குறைவு
சென்னையில் மாலை நேர நிலவரப்படி,
22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை
சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ.
37,088-க்கும், கிராமுக்கு ரூ.16
குறைந்து ரூ.4,636-க்கும் விற்பனை
செய்யப்படுகிறது.
24 கேரட் தங்கத்தின்
விலை சவரன் ரூ.40,128-க்கும், கிராம் ரூ.
5,016-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி
விலை கிராமுக்கு 0.90 காசு குறைந்து
கிராம் ரூ.66.60-க்கும், கிலோ வெள்ளி ரூ.
66,600-க்கும் விற்கப்படுகிறது.
BREAKING: பாஜகவில் இணைந்த
சூப்பர் ஸ்டார் ஜோடி… அதிரடி!
தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார்
விஜயசாந்தி காங்கிரசில் இருந்து விலகி
இன்று மீண்டும் பாஜவில் இணைந்தார்.
தெலங்கானா பாஜக தலைவர் சஞ்சய்
குமார், இணையமைச்சர் கிஷன் ரெட்டி
ஆகியோர் முன்னிலையில் அவர்
பாஜகவில் இணைந்தார்.
இதையடுத்து
அவர் மத்திய உள்துறை அமைச்சர்
அமித்ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவை நேரில் சென்று சந்திக்க உள்ளார். அவருக்கு பாஜகவினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
.