சிஏ தேர்வு ஒத்திவைப்பு
சிஏ தேர்வு ஒத்திவைப்பு
நாடு முழுவதும் நாளை முதல் டிசம்பர்
13-ந் தேதி வரை நடைபெறவிருந்த
சிஏ (CA -Chartered Accountant)
தேர்வு தாள்-1 ஒத்திவைக்கப்படுவதாக
இந்திய பட்டய கணக்காளர்கள்
நிறுவனம் அறிவித்துள்ளது.

தவிர்க்க
முடியாத காரணங்களால் சிஏ தேர்வு
ஒத்திவைக்கப்படுகிறது. மேலும்,
விவரங்களுக்கு https://www.icai.org/
என்ற இணையதளத்தில் அறிந்து
கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை – தமிழக
மக்களுக்கு சிறப்பு அறிவிப்பு
-உடனே செய்யுங்க…
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்
செல்பவர்களுக்கு வசதியாக அரசு விரைவு
போக்குவரத்து கழகம் முன்பதிவை
தொடங்கியுள்ளது. அதன்படி, பயணிகள்
முன்பதிவு மையங்கள், www.tnstc.in
என்ற இணையதளம் (அ) தனியார்
இணையதளத்திலும் டிக்கெட் முன்பதிவு
செய்து கொள்ளலாம்.
மேலும், ஜனவரி
முதல் வாரத்தில் சிறப்பு பேருந்துகளின்
அறிவிப்பு குறித்து வெளியிடப்படும்
என போக்குவரத்து கழக அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
டெஸ்ட் தரவரிசை – கோலியுடன்
இணைந்த வில்லியம்சன்
டெஸ்ட் வீரர்களின் தரவரிசை பட்டியலை
ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில்
வெ.இ.,க்கு எதிரான முதல் டெஸ்டில்
251 ரன்கள் எடுத்ததால், வில்லியம்சன் 2
இடங்கள் முன்னேறி 886 புள்ளிகளுடன்
விராட்கோலியுடன் 2-வது இடத்தை
பகிர்ந்து கொண்டார்.
முதலிடத்தில்
(911 புள்ளி) ஸ்மித் உள்ளார். மார்னஸ்
லாம்புசேன் 1 இடம் பின்தங்கி 4-வது
இடத்தை பிடித்தார். டாம் லாதம் 2
இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை
பிடித்தார்.
.