6 நாள்கள் கல்லூரிகள் செயல்படும்- அரசாணை
6 நாள்கள் கல்லூரிகள்
செயல்படும்- அரசாணை
வாரத்தில் 6 நாள்கள் கல்லூரிகள்
செயல்படும்; தொற்று அறிகுறி
இருந்தால் மாணவர்களுக்கு அனுமதி
இல்லை என்று தமிழக அரசு அரசாணை
வெளியிட்டுள்ளது. மேலும் கல்லூரியின்
விடுதியில் ஒரு அறையில் ஒரு
மாணவர் மட்டுமே இருக்க வேண்டும்.

கல்லூரிகளுக்கு அருகே உள்ள
உறவினர்கள் வீடுகளில் மாணவர்கள்
தங்கிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு
தெரிவித்துள்ளது.
அந்நிய மண்ணில் தொடர்
வெற்றி- இந்தியா 2வது இடம்!
அந்நிய நாட்டு மண்ணில் தொடர் வெற்றி
பெறும் பட்டியலில் இந்திய அணி 2வது
இடத்தை பிடித்துள்ளது.
வெளிநாட்டுமண்ணில் விளையாடிய சர்வதேசடி20 போட்டிகளில் இந்திய அணி
தொடர்ச்சியாக 10 வெற்றி பெற்று 2வது
இடத்திலும், 12 தொடர் வெற்றிகளைப்
பெற்று ஆப்கான் அணி முதலிடத்திலும்
உள்ளன.
கல்லூரி திறப்பு- வழிகாட்டு
நெறிமுறை
பல்கலை., மற்றும் கல்லூரிகளில் இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு இன்று
முதல் வகுப்புகள் தொடங்குகிறது.
இதற்கான வழிகாட்டு வழிமுறைகளை
தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 50%
மாணவர்களைக் கொண்டு சுழற்சி
முறையில் வகுப்புகளை நடத்தலாம்.
விருப்பமிருந்தால் மட்டும் கல்லூரிக்கு
மாணவர்கள் வரலாம்.
மற்றவர்கள்
பாடங்களை ஆன்லைனில் கற்கலாம்.
பேராசிரியர்கள், மாணவர்கள்
அனைவரும் உடல்வெப்பத்தை
கட்டாயம் பரிசோதிக்கவும், தனிமனித
இடைவெளியை கடைப்பிடிக்கவும்
உத்தரவிட்டுள்ளது.
.