முக்கிய அறிவிப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

முக்கிய அறிவிப்பு: இன்று முதல்
விண்ணப்பிக்கலாம்

சர்க்கரை அட்டைகளை ரேஷன்
அட்டைகளாக மாற்ற இன்று முதல்
விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு
அறிவித்துள்ளது. www.tnpds.gov.in என்ற
இணையதளத்தில் விண்ணப்பங்களை
சமர்ப்பிக்கலாம்.

தகுதியின் அடிப்படையில்
அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம்
செய்யலாம் என்று தமிழக அரசு
தெரிவித்துள்ளது.

BREAKING:முதல்வர் ஈபிஎஸ்-க்கு
ஷாக் கொடுத்த ஆளுநர்

அண்ணா பல்கலை., துணை வேந்தர்
சூரப்பா மீதான புகார் குறித்து விசாரிக்க
குழு அமைத்ததற்கு ஆளுநர் பன்வாரிலால்
கடும் எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர்
பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தனக்கு தெரியாமல் சூரப்பாவை
விசாரிக்க அரசு குழு அமைத்தது
நியாயமற்றது என்று அதிருப்தியை
வெளிப்படுத்திய ஆளுநர், கலையரசன்
தலைமையிலான குழு விசாரணையை
உடனே நிறுத்தி வைக்க வேண்டும் என்று
கட்டளையிட்டுள்ளார். தமிழக அரசின்
முடிவில் ஆளுநர் தலையிட்டதால்
முதல்வர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

குளிர்காலத்தில் சருமத்தை
காக்க…

*வெதுவெதுப்பான நீரில் முகம்
கழுவலாம், குளிக்கலாம்.

*உடனடியாகமாய்ச்சுரைசர் பூசுவது சரும வெடிப்பை தவிர்க்கும் *நீர்ச்சத்தை பராமரிக்க அதிக நீர், பழச்சாறுகள் அருந்தலாம்.

*முகச்சருமம் போலவே கை, கால்
சருமத்துக்கும் பராமரிப்பு அவசியம்.

*எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய்,
அன்னாசி போன்ற விட்டமின்-சி நிறைந்த
உணவுகளை அதிகம் எடுக்கலாம்.

*சர்க்கரை அதிகமுள்ள உணவுகளை
தவிர்க்கவும் *துரித உணவுகள், நொறுக்கு
தீனி, எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்க்கவும்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami