சப்போட்டா விதை செய்யும் மாயம்…
சப்போட்டா விதை செய்யும் மாயம்…
மருத்துவ குறிப்புகள்…
*சப்போட்டா பழத்தை தின்று, பின்னர்
ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்று மென்று
விழுங்கினால் பித்தம் விலகும். பித்த
மயக்கத்திற்கும் நல்ல மருந்து இது.

*இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை
முட்டைக்கோஸ் சீராக வைக்கும். *சௌ
சௌ நரம்பு தளர்ச்சியை போக்கும்.
*பூசணிக்காய் கல்லீரல், சிறுநீரகத்துக்கு
பலம் தரும். * வெண்டைக்காய் சர்க்கரை
நோயை கட்டுக்குள் வைக்கும்.
டி20 தரவரிசை – ராகுல்,
விராட்கோலி முன்னேற்றம்
சர்வதேச டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை
பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
இதில் டேவிட் மலன் (915)
முதலிடத்திலும், பாபர் அசாம் (871)
2-வது இடத்திலும் உள்ளனர்.
இந்திய
வீரர்கள் கே.எல். ராகுல் (816) முன்னேறி
3-வது இடத்தையும், விராட்கோலி (697)
1 இடம் முன்னேறி 8-வது இடத்தையும்
பிடித்துள்ளனர். ஆரோன் பின்ச் 1 இடம்
பின்தங்கி 4-வது இடம் பிடித்தார். மேலும்,
வான்டர் டசன் 5-வது, காலின் முன்ரோ
6-வது இடத்தில் உள்ளனர்.
நாளைக்குள் விண்ணப்பிக்க…
கேட் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி
பெறும் ஓபிசி, எஸ்சி, எஸ்டி மற்றும்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு,
அவர்கள் படிப்பை முடிக்கும் வரை
உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கேட் உதவித்தொகையுடன்
எம்இ, எம்டெக் படிக்க விரும்பும்
மாணவர்கள், டிச.,10 வரை மாணவர்
சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என
அண்ணா பல்கலை., அறிவித்துள்ளது.
டிச.,11-ந் தேதி இணைய வழியில்
எம்இ, எம்டெக் படிப்புகளுக்கு மாணவர்
சேர்க்கை நடைபெறும்.