தமிழக போலீசார் கண்ணில் மண்ணைத்தூவி டெல்லி பறந்து அய்யாக்கண்ணு சிக்கியது எப்படி?
தமிழக போலீசார் கண்ணில் மண்ணைத்தூவி டெல்லி பறந்து அய்யாக்கண்ணு சிக்கியது எப்படி?
நூதனமான முறையில் போராட்டம் செய்வதில் கைதேர்ந்தவர் அய்யாக்கண்ணு, இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் இருந்து சில விவசாயிகள் மூலம் டெல்லி சென்று விதவிதமான போரட்டத்தில் ஈடுபட்டு வந்தார் இவரது போராட்டத்திற்கு தமிழகம் தாண்டி மற்ற மாநில விவசாயிகள் இடையேயும் வரவேற்பு கிடைத்தது.
தமிழகத்தை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணுவை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர், ஆனால் அதன் பிறகு அவர் அரை நிர்வாண போராட்டம், மண்டை ஓடுகளை கொண்டு யாகம் வளர்ப்பது, ஒருபக்கம் மீசையை எடுத்து கொண்டு கோஷம் போடுவது, தூக்கில் தொங்குவது போன்று பல நாடகங்களை அரங்கேற்ற அது மக்களுக்கு ஒருவித எதிர்ப்பை உண்டாக்கியது.

மற்றொரு விவசாய சங்க பிரதிநிதி பாண்டியன் அய்யாக்கண்ணு தமிழக விவசாயிகள் மானத்தை வாங்குவதாகவும் அவர் நடத்தும் நாடகங்கள் முற்றுப்புள்ளி பெறவேண்டும் எனவும் வலியுறுத்தினார் இதையடுத்து அய்யாக்கண்ணு தமிழகம் திரும்ப பின்பு கோவில் கோவிலாக மத்திய அரசை எதிர்த்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் கோவில் பிரச்சாரம் செய்த அய்யாக்கண்ணுவை பாஜக பெண் நிர்வாகி கோவிலில் பிரச்சாரம் செய்ய யாருக்கும் அனுமதி இல்லை என்று தடுத்தார் அப்போது அய்யாக்கண்ணு அந்த பெண்ணை தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சிக்க பதிலுக்கு அய்யாக்கண்ணுவை கண்ணத்தில் அறைந்தார் அந்த பாஜக பெண் நிர்வாகி.
அத்துடன் அய்யாக்கண்ணுவின் ப்ரைம் டைம் முடிவடைந்தது, இந்நிலையில் தற்போது டெல்லியில் பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில் அவர்களுடன் அய்யாக்கண்ணு தனியாக ஒரு குழுவை கொண்டு சென்று போராட்டம் நடத்த முடிவு எடுப்பதாக மத்திய உளவுத்துறை தமிழக அரசிற்கு தகவல் கொடுத்தது இதை அடுத்து அய்யாக்கண்ணுவை போலீசார் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் திடீர் என போலீசார் கண்ணில் மண்ணை தூவிவிட்டு டெல்லி பறந்த அய்யாக்கண்ணுவை டெல்லியில் வைத்து டெல்லி காவல்துறை அதிரடியாக கோழி அமுக்குவதை போன்று அமுக்கி தமிழகத்திற்கு திருப்பி அனுப்பவுள்ளது, தமிழக போலீசாரிடம் தான் மதுரையில் நடக்கும் வழக்கு ஒன்றில் ஆஜராக போவதாக தெரிவித்த அய்யாக்கண்ணு வீட்டில் இருந்து காரில் வழக்கறிஞர் உடன் சென்றுள்ளார்.
அங்கிருந்து நீதிமன்றம் பின்வாசல் வழியாக மாறுவேடத்தில் மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி சென்றுள்ளார், உடனடியாக அய்யாக்கண்ணு நீதிமன்றத்தில் இல்லாததை உறுதி படுத்திய தமிழக போலீசார் டெல்லி போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர், அய்யாக்கண்ணு மாஸ்க் அணிந்து முகத்தை மறைத்து டெல்லியில் நுழைந்த நிலையில் அவரை அங்கேயே போராட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்லவிடாமல் டெல்லி போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று கைது செய்தனர் தமிழகதிற்கு திரும்ப செல்லும் படி அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால் அய்யாக்கண்ணு வீம்பு பிடித்து வருவதாகவும் டெல்லி காவல்துறையோ அய்யாக்கண்ணுவின் சொத்துப்பட்டியலை கையில் வைத்து கொண்டு எந்த வகையில் நீங்கள் விவசாயி என கூறுகிறீர்கள் என கேள்வி எழுப்பி வருவதாகவும் கூறப்படுகிறது.