வீடுகளில் போஸ்டர் ஒட்டக்கூடாது
வீடுகளில் போஸ்டர்
ஒட்டக்கூடாது
கொரோனாவால்
தனிமைப்படுத்தப்படுவோர் வீட்டில் உரிய
அனுமதியின்றி நோட்டீஸ் ஒட்டக்கூடாது
என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நோட்டீஸ் ஒட்டுவதால் தனிமனித உரிமை
பாதிக்கப்படுவதாக அளிக்கப்பட்ட
மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
தேவைப்படும் இடங்களில் மட்டும்
அனுமதியுடன் போஸ்டர் ஒட்ட உத்தரவிட்டுள்ளது.
மிதமான மழைக்கு வாய்ப்பு
வடகிழக்குப் பருவக்காற்றால் தமிழகம்
மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு
வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம்
தெரிவித்துள்ளது. சென்னை, புறநகர்
பகுதியில் வானம் மேகமூட்டத்துடன்
காணப்படும் என்றும், வடகிழக்கு
பருவமழை இயல்பை விட 9% அதிகம்
பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சென்னையில் இயல்பை விட
47% அதிகமாக 102.9 செமீ மழை
பதிவாகியுள்ளது.
தனித்தனியாக விசாரணை!
சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை
தமிழகம் தாண்டி இந்திய அளவில் பெரும்
அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் சித்ராவின் தற்கொலையில் மர்மம் உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில், பாண்டியன் ஸ்டோர் சீரியலில்
சித்ராவோடு நடித்த சக நடிகர்களுடன்
காவல்துறையினர் தனித்தனியே
விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயிலை நம்பியிருக்கும்
மாணவர்கள்
கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில்
போக்குவரத்து வசதியை ஏற்படுத்த
கோரிய மநீம தலைவர் கமல்ஹாசன்,
“இறுதியாண்டு மாணவர்களுக்கு
கல்விச்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன.
சென்னை புறநகர் ரயில்களில்
மாணவர்களுக்கு அனுமதி இல்லை. ஏழை
மாணவர்கள் நகருக்குள் வந்து செல்ல
நம்பி இருப்பது புறநகர் ரயில்களையே.
அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க
வேண்டும்” என்று டிவீட் செய்துள்ளார்.