இவர்கள் இருக்கும் வரை நீங்கள் முதல்வர் ஆகமுடியாது கனிமொழி, துரைமுருகன் வீடியோவை வெளியிட்ட பி. கே..!

இவர்கள் இருக்கும் வரை நீங்கள் முதல்வர் ஆகமுடியாது கனிமொழி, துரைமுருகன் வீடியோவை வெளியிட்ட பி. கே..!

கடந்த ஒருவாரத்தில் நடைபெற்ற மூன்று முக்கிய சம்பவங்கள் அவற்றிற்கு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற ரிசல்ட்டை திமுக தலைவர் ஸ்டாலினிடம் கொடுத்து இருக்கிறது தனியார் வியூகம் வகுக்கும் குழு அதில் கொங்கு மண்டலத்தில் கனிமொழியையும் மற்ற பகுதிகளில் உதயநிதி ஸ்டாலினையும் பிரச்சாரம் செய்யவும் விடியலை நோக்கி என்ற வாசகம் அடங்கிய ஒரு பரப்புரையை மேற்கொள்ள வியூகம் வகுக்கப்பட்டது.

அதன்படி முதல்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டார் இரண்டாவது நாள் கைது செய்யபட்ட உதயநிதி நள்ளிரவை நெருங்கும் வரை விடுதலை செய்யப்படவில்லை, அதன் பிறகே அவர் விடுவிக்கப்பட்டார் அப்போது நாங்கள் மீண்டும் 6 மாதத்தில் ஆட்சிக்கு வருவோம் அப்போது தெரியும் என எச்சரிக்கை விடுத்தார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்தை உண்டாக்கியது கூட்டணி கட்சியை சேர்ந்த சிலரே இது மக்களிடம் எதிர்ப்பை சந்திக்கும் எனவும் விமர்சனம் செய்தனர், இது ஒருபுறம் இருக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் கனிமொழி நோயாளியை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடாமல் இருந்த செய்தி மிக பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது வழிவிடாமல் இருந்தது மட்டுமல்லாமல் வேறு வழியில் செல்லுங்கள் என அவர்கூறியது முன்னணி ஊடகங்களிலும் எதிரொலித்தது.

இவர்கள்தான் இப்படி என்றால் சமீபத்தில் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை காத்திருப்போம் அதன் பிறகு அடிக்கு அடி என களத்தில் இறங்குவோம் என எச்சரிக்கை விடுத்தார், இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்க போகிறது என்ற உண்மையை சொல்லும் செய்தி என பலரும் பகிர்ந்தனர்.

நேற்றைய தினம் வேலூரில் ஆய்வு மேற்கொள்ள சென்ற மத்திய குழுவினருக்கு பாதுகாப்பு அளிக்க சென்ற காவல்துறை வாகனம் முன்னாள் சென்ற திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் வாகனத்தை முந்தியதாக கூறி காவலர்களை ஒருமையில் திட்டியதுடன் இன்னும் 6 மாதம் தான் அதன்பிறகு உனக்கு இருக்கு என எச்சரித்தனர், திமுக எம்.பி கதிர் ஆனந்த் போ பார்த்துகிறேன் என காவல் ஆய்வாளரை மிரட்டினார்.

இவற்றை இதுநாள் வரை திமுகவை ஆதரித்து வந்தவர்கள் கூட எதிர்த்து இருப்பதாகவும் மக்கள் மத்தியில் திமுக மீதும் மீண்டும் கட்டப்பஞ்சாயத்து போன்ற பயம் உண்டாக காரணமாக அமைய இந்த சம்பவங்கள் போதும் எனவும் சுட்டிக்காட்டி இருக்கிறது, அதோடு இல்லாமல் லல்லு பிரசாத் ஆட்சி மீதுள்ள பயம்தான் இத்தனை ஆண்டுகாலம் பீகாரில் RJD கட்சி வெற்றிபெற தடையாக இருக்கிறது, இதே நிலை இங்கும் உண்டாக கூடாது என்றால் அனைவரையும் வாயை அடக்க சொல்லுங்கள் என அந்த குழு அறிவுரை வழங்கியுள்ளது இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் கட்சியின் மூத்த நிர்வாகிகளை வாயை குறைக்க கூறியிருக்கிறார்.

மேலும் நடந்த சம்பவங்களின் வீடியோ காட்சிகளும் ஸ்டாலினுக்கு காட்டப்பட்டு இருக்கிறது, அதிலும் குறிப்பாக துரைமுருகன், கனிமொழி, ராசா ஆகியோர் நிச்சயம் உங்களை முதல்வர் ஆக விடமாட்டார்கள் சம்பந்தம் இல்லாமல் இறந்த ஜெயலலிதா குறித்து இப்போது சர்ச்சையை ஏற்படுத்தி மீண்டும் அனுதாப வாக்கு வங்கியை அதிமுகவிற்கு ராசா உருவாக்கி கொடுக்கிறார்,2ஜி வழக்கை முன்வைத்து இனி விவாதம் தொடர்ந்தால் அது திமுகவிற்கு நல்லது இல்லை, நாளை நீதிமன்ற தீர்ப்பு கனிமொழி, ராசாவிற்கு எதிராக வந்தால் நிச்சயம் அதுவே தேர்தலில் மிக பெரிய பிரச்சாரமாக எதிரொலிக்கும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்டாலின் விரைவில் உயர்மட்ட கூட்டத்தை கூட்ட இருக்கிறராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami