வறுமையில் ‘மரம்’ கருப்பையா அரிசி வேண்டாம் மரம் நடுங்கள் உருக்கம்
வறுமையில் ‘மரம்’ கருப்பையா
அரிசி வேண்டாம் மரம் நடுங்கள் உருக்கம்
கடந்த 40 ஆண்டுகளாக அரியலூர் உள்பட
15 மாவட்டங்களில் 4 லட்சத்துக்கும்
மேற்ப்பட்ட மரக்கன்றுகளை நட்டு
சாதனை படைத்த ‘மரம்’ கருப்பையா, 90
வயதில் படுத்த படுக்கையாகி உணவிற்கே தவித்து வருகிறார்.

மற்றவர் அரசி, பருப்பு
வழங்கினாலும் அவற்றை வாங்காமல்
மரம் நடுமாறு அறிவுறுத்தி வரும்
இவருக்கு மீண்டும் முதியோர் உதவித்
தொகை வழங்க சமூக ஆர்வலர்கள்
வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புறக்கணிப்பு – டெல்லி
விவசாயிகள் கோரிக்கை
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி
15வது நாளாக போராடி வரும்
விவசாயிகள், அம்பானி நிறுவனத்தின்
பொருட்களை மக்கள் அனைவரும்
புறக்கணிக்க வேண்டும் என்று டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும்,
வரும் 14ம் தேதி பாஜக அலுவலகங்களை
முற்றுகையிட்டு போராட்டம்
நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
‘ஆத்தா நா பாஸ் ஆயிட்டேன்’
சிறையில் சின்னம்மா ஹேப்பி!
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு
பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில்
தண்டனை அனுபவித்து வரும் சசிகலா,
சிறு தொட்டிகளில் தர்ப்பூசணி, காளான்
வளர்த்தும் பணம் சம்பாதித்துள்ளார்.
மேலும், சிறைக்கு வரும் கன்னட
ஆசிரியர்களிடம் கன்னடம் கற்க
தொடங்கி, அதில் மூன்றாம் வகுப்பு
தேர்ச்சி பெற்றுள்ளார். படிங்க பாஸ்,
வாழ்க்கை நல்லாருக்கும். உழைப்பே
ஊதியம் தரும்!
.