சித்ரா தற்கொலை -ஓட்டலுக்கு வந்த அமைச்சர்புதிய பரபரப்பு
சித்ரா தற்கொலை -ஓட்டலுக்கு
வந்த அமைச்சர்புதிய பரபரப்பு
நடிகை சித்ரா தற்கொலை செய்த
சம்பவத்தில் புதிய பரபரப்பு
ஏற்பட்டுள்ளது. சித்ரா தற்கொலை செய்து
கொண்ட நட்சத்திர ஓட்டலுக்கு அமைச்சர்
வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. யார்
அந்த அமைச்சர் என்பது குறித்து எந்த
தகவலும் வெளியாகவில்லை.

காலையில்,
சித்ராவின் வாட்ஸ்அப் எண்ணுக்கு
புத்தாண்டை தன்னுடன் கொண்டாட
வேண்டும் என்று அரசியல் பிரமுகர்
மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்ததாக
செய்தி வெளியானது குறிப்படத்தக்கது.
ஆதிதிராவிடர் நலத்துறையில்
வேலை
ஆதிதிராவிடர் நலத்துறையில் காலியாக
உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு
வெளியாகியுள்ளது. பணி: சமையலர்.
காலிப்பணியிடங்கள்: 32. பணியிடம்:
தஞ்சாவூர். கல்வித்தகுதி: தமிழ் எழுத,
படிக்க தெரிந்தவர்கள். வயது: 18 – 35.
தேர்வு: நேர்காணல். விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 24.
மயங்கிய ஸ்டாலின் – அச்சத்தில்
கட்சியினர்
நலத்திட்ட உதவிகள் வழங்கும்
நிகழ்ச்சியில் திமுக தலைவர்
மு.க.ஸ்டாலினுக்கு திடீரென உடல்நலக்
குறைவு ஏற்பட்ட காரணத்தால்
கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்டாலினுக்கு மயக்கம் ஏற்பட்ட நிலையில்
உடனடியாக மருத்துவமனையில்
பரிசோதனை செய்த நிலையில் ரத்த
அழுத்தம், இசிஜி எடுக்கப்பட்டது என்றும்,
ஸ்டாலின் நலமுடன் இருப்பதாகவும்
மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மேலும், மருத்துவர்கள் அறிவுரைப்படி
ஓய்வு எடுக்கவுள்ளதாக ஸ்டாலின்
தெரிவித்துள்ளார்.