மருத்துவமனை இன்று மாலை 6 மணி வரை செயல்படாது – அதிரடி அறிவிப்பு
மருத்துவமனை இன்று மாலை 6 மணி வரை செயல்படாது – அதிரடி
அறிவிப்பு
மருத்துவர்கள் வேலைநிறுத்தம்
காரணமாக அவசரகால சேவைகள்,
கோவிட் சேவைகள் அல்லாத மற்ற
அனைத்து சேவைகளும் இன்று மாலை
6 மணி வரை மூடப்பட்டிருக்கும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநோயாளிகள் பிரிவுகள்
மூடப்பட்டிருக்கும். ஐசியுக்கள், சிசியுக்கள்
மற்றும் அவசர வார்டுகள் செயல்பாட்டில்
இருக்கும். ஆனால், அவசரமற்ற அறுவை
சிகிச்சைகள் நிறுத்தப்படும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு
சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்லும்
பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள்
இயக்கப்படுகின்றன.
இந்நிலையில்,
இந்த பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு
இன்று முதல் தொடங்கியுள்ளது.
அதன்படி, பயணிகள் www.tnstc.in,
www.redbus.in, www.paytm.com ஆகிய
இணையதளங்களில் டிக்கெட் முன்பதிவு
செய்து கொள்ளலாம்.
ஊராட்சி தலைவர் வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு
நிறுத்தி வைக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட
ஊராட்சி தலைவர், துணைத்தலைவர்
தேர்தல் சிவகங்கை மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
இதில் மாவட்ட ஊராட்சி
தலைவர் பதவிக்கு திமுக சார்பில் செந்தில்,அதிமுக சார்பில் பொன்மணி பாஸ்கர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 16 வார்டுகளில் அதிமுக, திமுக கூட்டணி
தலா 8 வார்டில் சமமாக வெற்றி
பெற்றதால் இன்று தேர்தல் நடக்கிறது.