Update அறிக்கை: போஸ்டர் ஒட்டி கொண்டாடிய அஜித் ரசிகர்கள்!

Update அறிக்கை: போஸ்டர்
ஒட்டி கொண்டாடிய அஜித்
ரசிகர்கள்!

காயங்களை கூட பொருட்படுத்தாமல்
குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்க
வேண்டும் என்று கடுமையாக உழைக்கும்
அஜித், தயாரிப்பாளர் போனி கபூர்
ஆகியோர் ஆலோசித்து விரைவில்
வலிமை படத்தின் அப்டேட்டை
வெளியிடுவார்கள் என்று நேற்று அறிக்கை வெளியானது.

இந்நிலையில், அஜித்
ரசிகர்கள் UPDATE தேவையில்லை!
இந்த அறிக்கை ஒன்றே போதும்! என்று
கூறி, மதுரை முழுவதும் போஸ்டர்
ஒட்டியுள்ளனர்.

கொரோனாவால் விளைந்த
நன்மை

உலகம் முழுவதையும் பாதித்த கொரோனா தொற்று காரணமாக வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு வெளியீடு 7% குறைந்துள்ளது.

கொரோனா தொற்று
காரணமாக மக்கள் வீட்டிலேயே தங்கி
இருந்தது, போக்குவரத்து மற்றும் உற்பத்தி
செயல்பாடுகள் குறைந்தது உள்ளிட்ட
காரணங்களால் வளிமண்டலத்தில் கடந்த
ஆண்டில் 3,640 கோடி டன்னாக இருந்த
கார்பன் டை ஆக்சைடு கலப்பு, 2020-ல்
3,400 கோடி டன்னாக குறைந்துள்ளது.
இது சுற்றுச்சூழலுக்கு நல்லது.

சித்ரா தற்கொலை -ஓட்டலுக்கு
வந்த அமைச்சர்புதிய பரபரப்பு

நடிகை சித்ரா தற்கொலை செய்த
சம்பவத்தில் புதிய பரபரப்பு
ஏற்பட்டுள்ளது. சித்ரா தற்கொலை செய்து
கொண்ட நட்சத்திர ஓட்டலுக்கு அமைச்சர்
வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. யார்
அந்த அமைச்சர் என்பது குறித்து எந்த
தகவலும் வெளியாகவில்லை.

காலையில்,
சித்ராவின் வாட்ஸ்அப் எண்ணுக்கு
புத்தாண்டை தன்னுடன் கொண்டாட
வேண்டும் என்று அரசியல் பிரமுகர்
மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்ததாக
செய்தி வெளியானது குறிப்படத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami