சவுதியில் மதுரை மன்னனாக களமிறங்கும் ஏம்பல் ஹீரோ!!!
சவுதியில் மதுரை மன்னனாக களமிறங்கும் ஏம்பல் ஹீரோ!!!
சவூதி அரேபியா நாட்டில் தமிழ்நாடு பிரீமியர் லீக் என்ற தொடர் நடைபெறுகிறது, இதில் சவுதியில் பணிபுரியும் தமிழர்கள் நான்கு அணிகளாக தொடரை எதிர்கொள்ள இருக்கின்றனர். 8 ஓவர் போட்டிகளாக நடைபெறும் இந்த போட்டியில்.,
சென்னை சிங்கம்ஸ், மதுரை மன்னன்ஸ், திருச்சி வாரியர்ஸ்,குமரி வீரன் என 4 அணிகள் மோதுகின்றன, இப்போட்டிகள் அனைத்தும் யூடியூபில் நேரலை செய்யப்படுவதாக நிகழ்ச்சியை நடத்தும் நிர்வாகம் தெரிவித்துள்ளது, மதுரை மன்னன் அணி தலைவராக தேர்வாகியிருக்கும் முத்துக்குமார் அருந்தாங்கி அருகே ஏம்பல் பகுதியை சேர்ந்தவர்.

அப் பகுதிகளில் நடைபெறும் பல உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது, தற்போது சவூதி நாட்டில் பொறியாளராக பணியாற்றி வருகிறார், பார்ப்போம் மதுரை மன்னன் போட்டியை கை பற்றுகிறதா இல்லை வேறொரு அணி கோப்பையை தட்டி செல்கிறதா என போட்டியின் முடிவில் காணலாம்.