பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு -அய்யயோ?
பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு -அய்யயோ?
2 எவிக்ஷான் – வெளியேறுவது
யார் தெரியுமா
பிக்பாஸ்4 நிகழ்ச்சியில் குரூப்பிஸம்
உள்ளதை குறிப்பிட்டு இன்று வெளியான
பிரமோவில் தொகுப்பாளர் கமல்ஹாசன்,
‘ஜோடியா விளையாடினா ஜோடியா
வெளிய போவீங்க’ என்று குறிப்பிட்டு
இந்த வாரம் 2 எவிக்ஷன் என்பதை
உறுதி செய்துள்ளார்.

மேலும், அதில்
ஒன்று இன்றே நடக்கும் என்றும்
தெரிவித்துள்ளார். மேலும், நிஷா,
ரமேஷ், சோம் ஆகியோரில் இருவர்
நிச்சயம் வெளியேறுவார்கள் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
டிஸ்னியின் புதிய படங்கள் –
மகிழ்ச்சியில் ரசிகர்கள்
வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரிக்கும்
10 புதிய படங்களின் டிரைலர்கள்
ரிலீஸாகியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா காரணமாக
பல மாதங்களாக உலகம் முழுவதும்
திரையரங்குகள் மூடப்பட்டு திரையுலகமே
முடங்கியுள்ள நிலையில், முன்னணி
நட்சத்திரங்களுடன் உருவாவதால்
ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
அதிக லாபம் ஈட்டவே புதிய
வேளாண் சட்டம்-பிரதமர் மூடி
விவசாயிகள் அதிக லாபம் ஈட்டவே
புதிய வேளாண் சட்டங்கள்
இயற்றப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி
தெரிவித்துள்ளார்.
புதிய சட்டங்கள்
மூலம் விவசாயத்தை ஊக்குவித்து,
கூடுதல் வசதிகளை பெற வாய்ப்பு
உருவாக்கப்பட்டு உள்ளதாகவும்,
டிஜிட்டல் தொழில்நுட்பத்தை
பயன்படுத்தி பாதுகாப்பான, எளிய
பண பரிவர்த்தனைக்கு இதில்
வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.