BREAKING பிரதமர் மோடிக்கு எதிராக சவுதியில் போராட்டம் நடத்திய இந்தியர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த சவூதி அரசாங்கம்!!!

BREAKING பிரதமர் மோடிக்கு எதிராக சவுதியில் போராட்டம் நடத்திய இந்தியர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த சவூதி அரசாங்கம்!!!

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட CAA சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்றும் இந்தியாவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை குறைப்பதற்காக இந்த நடவடிக்கையை பிரதமர் மோடி எடுத்து இருப்பதாக சில இஸ்லாமிய அமைப்புகளும் அவர்களுக்கு ஆதரவாக சில கட்சிகளும் நாடு முழுவதும் போராட்டத்தில் இறங்கின.

பல மாநிலங்களில் கலவரம் வெடித்தது மேற்கு வங்க மாநிலத்தில் ரயில்கள் எரிக்கப்பட்டன, இந்த சூழலில் இந்தியாவில் நிறைவேற்றபட்ட CAA சட்டம் குறித்து பல இஸ்லாமிய நாடுகளில் சிலர் போராட்டம் நடத்தினர் அதே போல் சவூதி அரேபிய நாட்டில் ஜெட்டாவில் போராட்டங்கள் நடைபெற்றன அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் பிரதமர் மோடியின் உருவப்படங்களை சர்ச்சையாக குறிப்பிட்டனர்.

மேலும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் அவர்கள் கருத்து தெரிவித்தனர், இந்த சூழலில் சவூதி அரேபிய அரசாங்கம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் அடையாளம் காணும் பணியை தொடங்கியதாகவும், அதில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை தவறாக சித்தரித்த நபர்கள் கண்டறியபட்டு கைது செய்யப்பட்டத்துடன் உடனடியாக சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பியிருக்கிறார்கள்.

இவர்களில் 90% நபர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதும் 40% பேர் தற்போது நல்ல சம்பளத்தில் பணியில் இருந்த நிலையில் அனைத்தையும் இழந்தாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன, இதனை வெளிநாடுகள் விவகாரத்தை வெளியிடும் ஆங்கில பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
https://www.middleeastmonitor.com/category/news-2/

சவூதி அரசாங்கத்திற்கு என்று தனி சட்டம் இருப்பதாகவும் உலக அளவில் வளர்ந்துவரும் இந்தியாவை பகைத்து கொள்ள அந்நாடு விரும்பவில்லை என்றும், சவூதி அரபியாவின் எண்ணை உற்பத்தியை வாங்கும் நாடுகளில் இந்தியாவே முன்னணியில் இருப்பதாலும் இந்தியாவுடன் நடப்பை பலப்படுத்த சவூதி விரும்பவதாகவும் எனவே தான் இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட்டு மத மோதலை உண்டுபண்ணும் நோக்கில் போராட்டத்தை நடத்திய நபர்களை கைது செய்து சொந்த நாட்டிற்கு அந்நாடு நாடுகடத்தி இருக்கிறது.

சவூதி அண்ணா அரசாங்கத்தின் செயல்பாட்டிற்கு இந்தியாவை சேர்ந்த பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிழைக்க சென்ற இடத்தில் மத மோதலை உண்டாக்க நினைத்தவர்கள் இப்போது வேலையிழந்து வீதிக்கு வரும் நிலைமை உருவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami