ஆன்லைனில் மாற்றும் வசதி
ஆன்லைனில் மாற்றும் வசதி
கொரோனா காலத்தில் பாலிசிதாரர்களுக்கு
உதவும் வகையில், யூலிப் பாலிசிகளின்
ஃபண்ட் வகைகளை ஆன்லைனில் மாற்றம் செய்யும் வசதியை எல்ஐசி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, நியூ
எண்டோமெண்ட் ப்ளஸ் (திட்டம் 935),
நிவேஷ் ப்ளஸ் (திட்டம் 849), எஸ்ஐஐபி
(திட்டம் 852) ஆகிய 3 பாலிசிகளுக்கு
இந்த வசதி கிடைக்கும். இதற்கு கட்டணம்
எதுவும் செலுத்த தேவையில்லை என்றும்
தெரிவித்துள்ளது.
கப்பல் கட்டும் துறையில் பணி
ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட்
லிமிட்டெட் நிறுவனத்தில் காலியாக
உள்ள பணியிடங்களை நிரப்ப
அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Loof: General Manager, Medical
Officer, Senior Consultant and Other.
காலிப்பணியிடங்கள்: 26. பணியிடம்:
விசாகப்பட்டினம். கல்வித்தகுதி: B.E/
B.Tech/M.Tech/B.L/CA/MBA/M.Sc/
MCA/MBBS/Any degree/Masters
degree/MMS/LLB. வயது: 50-க்குள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி ஜன.,8.
110 இன்ச் மைக்ரோ எல்இடி டிவி
சாம்சங் நிறுவனம் தனது 110 இன்ச்
மைக்ரோ எல்இடி டிவியை கொரிய
சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த டிவி 2021-ல் சர்வதேச சந்தையில்
அறிமுகமாக உள்ளது.
இந்த டிவி
4K HDR தரவுகளை இயக்கும் வசதி
கொண்டது. இதில் உள்ள மல்டி-வியூ
அம்சம் மூலம் ஒரே நேரத்தில் 55 இன்ச்
அளவில் 4 வெவ்வேறு தரவுகளை பார்க்க
முடியும். இதன் விலை 156,400 டாலர்
(இந்திய மதிப்பில் ரூ.1.15 கோடி) என
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.