அதிக லாபம் ஈட்டவே புதிய வேளாண் சட்டம்-பிரதமர் மூடி
அதிக லாபம் ஈட்டவே புதிய
வேளாண் சட்டம்-பிரதமர் மூடி
விவசாயிகள் அதிக லாபம் ஈட்டவே
புதிய வேளாண் சட்டங்கள்
இயற்றப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி
தெரிவித்துள்ளார்.

புதிய சட்டங்கள்
மூலம் விவசாயத்தை ஊக்குவித்து,
கூடுதல் வசதிகளை பெற வாய்ப்பு
உருவாக்கப்பட்டு உள்ளதாகவும்,
டிஜிட்டல் தொழில்நுட்பத்தை
பயன்படுத்தி பாதுகாப்பான, எளிய
பண பரிவர்த்தனைக்கு இதில்
வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முதல்வரை அவதூறாக பேசியதால் ஆ. ராசா மீது வழக்கு பதிவு !
முதல்வர் பழனிசாமியை அவதூறாக
விமர்சித்த புகாரில் திமுக எம்பி
ஆ.ராசா மீது போலீஸ் வழக்கு
பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அதிமுக
வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர்
திருமாறன் மற்றும் செல்வகுமார்
ஆகியோர் அளித்த புகாரின்பேரில்,
153, 505(1)(b) ஆகிய 2 பிரிவுகள்:
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பி
ஆதாயம் தேடுதல், குற்றச்செயல்களில்
ஈடுபட தூண்டுதல் ஆகியவற்றின் கீழ்
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்
வழங்கு பதிவு செய்து விசாரணை
மேற்கொள்ளவுள்ளனர்.
உலகம் முழுவதும் எரிகற்கள் மழை -மிஸ் பண்ணாதீங்க… oh Wow!
டிச.,13, 14-ல் நிகழும் அதிசயம்..
வால் நட்சத்திரங்கள் விட்டுச்செல்லும்
தூசி மண்டலத்தின் வழியாக செல்வதால்,
டிச.,13, 14-ந் தேதிகளில் எரிகற்கள்
மழையாய் பொழியும் என வானிலை
நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதிகபட்சமாக 1 மணிநேரத்தில் 150
எரிநட்சத்திரங்கள் விழும் என்றும், உலகம்
முழுவதும் இந்த காட்சி தெரியும் எனவும்
தெரிவித்துள்ளனர். ஆனால், ஒளி மாசு
நிறைந்த நகர்ப்புறங்களில் இந்த காட்சியை ஓரளவுக்கு தான் காண முடியும்.