சர்ச்சைக்குள்ளான தனுஷின் கர்ணன் படம்
சர்ச்சைக்குள்ளான தனுஷின்
கர்ணன் படம்
கர்ணன் திரைப்படத் தலைப்பை
மீண்டும் உபயோகப்படுத்த கூடாது என
தனுஷூக்கு சிவாஜி சமூகநலப்பேர்வை
கடிதம் எழுதியுள்ளது.

தனுஷ் நடிப்பது
ஒரு சமூகத்தை சார்ந்த திரைப்படம்
என்றும், அதற்கு கர்ணன் என
பெயரிடுவது மகாபாரதத்தை நேசிக்கும்
கோடிக்கணக்கானோரின் மனதை
புண்படுத்தக்கூடியதாக அமையும்
என்பதால் பெயர் மாற்றம் வேண்டும்
என்று விளக்கம் அளித்துள்ளனர்.
யாருக்காக பாராளுமன்றம்?மநீம தலைவர் கமல்ஹாசன் கேள்வி?
“சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில்
ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து
போனார்கள்.
மக்களைக் காக்கத்தான்
இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள்.
கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து
பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்,
ஆயிரம் கோடியில் பாராளுமன்றம்
கட்டுவது யாரைக்காக்க? பதில்
சொல்லுங்கள் என் மாண்புமிகு
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே என்று மநீம
தலைவர் கமல்ஹாசன் வினவியுள்ளார்.
எக்ஸிம் வங்கியில் வேலை
எக்ஸிம் (EXIM) வங்கியில் காலியாக
உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு
வெளியாகியுள்ளது.
பணி: Management
Trainee. காலிப்பணியிடங்கள்: 60.
பணியிடம்: நாடு முழுவதும். வயது:
30-க்குள். சம்பளம்: ரூ.40,000.
கல்வித்தகுதி: B.E/MBA/PGDCA/Master’s
degree. விண்ணப்ப கட்டணம் ரூ.600.
(SC/ ST/ PWD ரூ.100). விண்ணப்பிக்க
கடைசி தேதி டிச., 31. மேலும்,
விவரங்களுக்கு www.eximbankindia.in/
careers என்ற இணையதளத்தை
பார்க்கவும்.