சீரியல் நடிகை மரணம் தொடரும் மர்மம் – முக்கிய தகவல்
சீரியல் நடிகை மரணம் தொடரும்
மர்மம் – முக்கிய தகவல்
சீரியல் நடிகை சித்ரா தற்கொலை
தொடர்பாக, ஆர்டிஓ இன்று
விசாரணையை தொடங்கவுள்ளார்.
முதலில் சித்ரா மற்றும் ஹேம்நாத்
குடும்பத்தினரிடம் இருந்து விசாரணையை தொடங்குகிறார்.

அதன்பின் ஓட்டல்
ஊழியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவரிடம்
விசாரணை நடத்தவுள்ளார். ஏற்கனவே
ஹேம்நாத் முன்னுக்கு பின் முரணாக
பதிலளித்து வருவதால், அவரிடம் இன்று
தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளனர்.
இதில் மாறுபட்ட தகவல்கள் வெளியானால்
ஹேம்நாத் மீது தற்கொலைக்கு
தூண்டியதாக வழக்குப்பதிவு செய்ய
வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
JustIn: வங்கிகளில் இன்று முதல்
அதிரடி மாற்றம் – மக்களுக்கு
அறிவிப்பு
வங்கிகளில் அதிக மதிப்பிலான
பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படும்
ரியல் டைம் கிராஸ் செட்டில்மென்ட்
(RTGS) 24 மணிநேர சேவை இன்று முதல்
அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ரூ.2
லட்சத்திற்கு மேல் பணப்பரிமாற்றம் செய்ய விரும்புவோர் இனி 24 மணிநேரமும் RTGS சேவையை பயன்படுத்தலாம்.
இதன்மூலம் RTGS சேவையை 24
மணிநேரமும் செயல்படுத்தும் உலக
நாடுகள் பட்டியலில் இந்தியாவும்
இணைந்துள்ளது. மேலும், குறைந்த
மதிப்பிலான பரிவர்த்தனைகளுக்கு
நெஃப்ட் சேவை பிரபலமாக உள்ளது.
Breaking: கொரோனாவால்
பிரதமர் மரணம் – அதிர்ச்சி
கொரோனாவால் பாதிக்கப்பட்ட
ஸ்வாசிலாந்து (எஸ்வாதினி)
நாட்டின் பிரதமர் அம்புரோஸ்
லாமினி(52 வயது) உயிரிழந்தார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட
இவர், தென்னாப்பிரிக்காவில் உள்ள
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி
உயிரிழந்தார். தொழிலதிபரான
இவர் கடந்த 2018-ல் பிரதமராக
நியமிக்கப்பட்டார். இவரது மறைவுக்கு
பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.