சரியான நேரத்தில் சரியான தகவலை அம்பலப்படுத்திய பானு கோம்ஸ்!!!
சரியான நேரத்தில் சரியான தகவலை அம்பலப்படுத்திய பானு கோம்ஸ்!!!
பிரபல அரசியல் விமர்சகர் பானு கோம்ஸ் தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் தொடர் போராட்டத்தில் நடைபெற்ற சில சம்பவங்களை பட்டியலிட்டுள்ளார், இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள கருத்து பின்வருமாறு :-
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் காலிஸ்தான் ஆதரவு,5 G தொழில்நுட்பம் கூடாது, சீன வைரஸ் தொற்றுக்காக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தை நீக்க வேண்டும்.
சீன வைரஸ்க்கான தடுப்பு மருந்தை கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தக் கூடாது.
மாஸ்க் அணிய வேண்டும் என்று வற்புறுத்தக்கூடாது சீன வைரஸ் தொற்று பாதிப்பை அறிய டெஸ்ட் எடுக்குமாறு வற்புறுத்தக்கூடாது
மேற்கண்டவை எல்லாம் …பஞ்சாப் விவசாயிகள் என்கிற பெயரில் எதிர் அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் இலக்கற்ற அமளியில் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கோஷங்கள்/ கோரிக்கைகள்/ பதாகைகள்.

இன்னொரு புறம் தங்கள் பெயரில் நடக்கும் முரண்பட்ட அரசியல் போராட்டத்தை அடையாளம் கண்டு கொண்ட அகில இந்திய அளவிலான விவசாய அமைப்புகள்/ மாநில விவசாய அமைப்புகள் என்று பல உண்மையான விவசாய அமைப்புகள் மத்திய அரசின் விவசாய சட்டத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவிக்க ஆரம்பித்திருக்கின்றன.
எது எப்படியோ…
ஒவ்வொரு போராட்டத்தின் வாயிலாகவும் எதிர் அரசியலின் தலைமையற்ற & இலக்கற்ற தன்மையும், உலகளாவிய வலைப்பின்னலும் கூட்டாக வெளிப்பட்டுக் கொண்டே இருப்பது சிறப்பு.என அவர் குறிப்பிட்டுள்ளார் டெல்லியில் நடைபெறும் போராட்டம் மிகுந்த சந்தேகத்தை பொது மக்களுக்கு உண்டாக்கியுள்ளது.
அங்கு போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு மசாஜ் சென்டர், பிஸ்சா கடை, முந்திரி பருப்பு, மூன்று வேலை ராஜ உணவுடன் மாலை வேலையில் நொறுக்கு தீனி, இரவில் பொழுதை கழிக்க பெரிய திரை, துணிகளை துவைக்க வாஷிங் மெஷின், படுத்து உறங்க மெத்தைகள் என உலகிலேயே மிக அதிக பொருட்செலவில் நடைபெறும் போராட்டத்திற்கு பணம் எங்கிருந்து வருகிறது என பலர் கேள்வி எழுப்பி கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையில் ஏன் 5ஜி தொழில்நுட்பம் கூடாது, சீனாவில் இருந்து பரவிய கொரோனா தொற்றிற்கு மருந்து கூடாது என விவசாயிகள் போராட்டவேண்டும் இதன் பின்னணியில் இருப்பது என்ன என பானு கோம்ஸ் எழுப்பிய கேள்வி விவசாயிகள் போர்வையில் இந்தியாவிற்கு எதிரான சீனாவின் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை அதிகரித்துள்ளது.