எம்ஜிஆர் மடியில் வளர்ந்தவன் நான் என்பது நினைவிருக்கட்டும்

எம்ஜிஆர் மடியில் வளர்ந்தவன்
நான் என்பது நினைவிருக்கட்டும்

“புரட்சித் தலைவர் திமுகவில்
இருந்தபோது திமுக திலகம் அல்ல;
தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக
திலகமும் அல்ல; என்றென்றும் அவர்
மக்கள் திலகம்.

எம்.ஜி.ஆர் முகத்தைக்
கூட பார்த்திராதவர்களே, நான் அவர்
மடியில் வளர்ந்தவன் நினைவிருக்கட்டும்.

எதுவும் தடையல்ல” என்று மநீம

தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

2020-ல் அதிக ரீட்வீட் – தோனி
அனுப்பிய ட்வீட் முதலிடம்

2020-ம் ஆண்டில் அதிகம் ரீட்வீட்
செய்யப்பட்ட ட்வீட்-களில், பிரதமர்
மோடிக்கு தோனி அனுப்பிய ட்வீட்
முதலிடம் பிடித்துள்ளது. சர்வதேச
கிரிக்கெட் போட்டியில் இருந்து தோனி
ஓய்வு அறிவித்த போது மோடி தோனிக்கு
ட்வீட் செய்திருந்தார்.

இதற்கு நன்றி
தெரிவித்து தோனி பதிவிட்ட ட்வீட்
73,500 முறை ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது.
மேலும், 2020-ல் சமூக வலைதளங்களில்
அதிகம் பேசப்பட்ட வீரர்களில்
விராட்கோலி முதலிடம் பிடித்துள்ளார்.

JustNow: ‘நீ செத்துத் தொல’
சித்ரா தற்கொலை: அதிர்ச்சி
தகவல்

சீரியல் நடிகை சித்ரா தற்கொலை
சம்பவத்தில், கணவர் ஹேம்நாத் கைது
செய்யப்பட்ட நிலையில் மேலும் பல
அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, கடந்த 9-ந் தேதி விடுதி
அறையில் இருந்த சித்ராவுக்கும்,
ஹேம்நாத்துக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் மனமுடைந்த சித்ரா, ‘நீ இல்லாமல்
என்னால் இருக்க முடியாது’ என
கூறியுள்ளார்.

அதற்கு ஹேம்நாத்,
‘நீ செத்துத் தொல’ என கூறிவிட்டு
அறையை விட்டு சென்றுவிட்டார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான
சித்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து
கொண்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami