கேரளாவில் கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக ஒரு வாக்கு வித்தியாசத்தில் அடித்து தூக்கியது.

கேரளாவில் கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக ஒரு வாக்கு வித்தியாசத்தில் அடித்து தூக்கியது.

கேரள மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னோட்டமாக சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தல் நேரத்தில் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதாவது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. மூன்று கட்டங்களாக நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 244 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதன் காரணமாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.

மலப்புரம், கோழிக்கோடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்யும் கேரள மாநிலத்தில், எப்படியாவது கால் தடம் பதிக்க வேண்டும் என்று பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இதையொட்டி உள்ளாட்சிகளில் பெருவாரியான இடங்களை கைப்பற்ற தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் இடதுசாரிகள்(LDF), காங்கிரஸ்(UDF), பாஜக(BJP) என மும்முனைப் போட்டி நிலவியது.

கொச்சியில் வாக்குகள் எண்ணப்பட்ட முதல் மணிநேரத்தில், கொச்சியில் காங்கிரஸ் கூட்டணி அதிர்ச்சியடைந்தது. காங்கிரஸ் கட்சியின் மிகவும் நம்பிக்கைக்குரிய மேயர் வேட்பாளராகக் கருதப்பட்ட மூத்த தலைவர் என் வேணுகோபால் பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்துள்ளார்.
காங்கிரஸ் அதன் செல்வாக்கான இடமான வடக்கு தீவு பிரிவில் தோற்றது. பாஜக வேட்பாளர் இங்கு ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் இதை காங்கிரஸ் எதிர்பார்க்கவில்லை அதிர்ச்சியடைந்தது. பாஜக பல இடங்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக 2015-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் இருந்தது ஆனால் 2020 உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்துள்ளது.

வட மாநில கட்சி என பரவலாக தென் மாநிலங்களில் பிரச்சாரம் செய்யபட்ட பாஜக இப்போது தென் மாநிலங்களில் தனது கால் தடத்தை அழுத்தமாக பதிவு செய்து வருகிறது என்பது தற்போதைய கேரள மாநில உள்ளாட்சி தேர்தல்கள் மூலம் தெரியவந்துள்ளதாக அம்மாநில பாஜக கருத்து தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami