கேரள பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றபின் சொல்லிய ஒரு வார்த்தை வறுபடும் திமுகவினர் காரணம் என்ன?

கேரள பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றபின் சொல்லிய ஒரு வார்த்தை வறுபடும் திமுகவினர் காரணம் என்ன?

தமிழக ஊடகங்கள் குறிப்பாக சில முன்னணி ஆன்லைன் ஊடகங்கள் மக்கள் மத்தியில் போலி செய்தியை பரப்புவதில் முன்னிலை வகிக்கின்றன நேற்று ரஜினி மனைவி லதா ரஜினிகாந்திற்கு நீதிமன்றம் வாடகையை செலுத்த வேண்டும் என கடுமையாக எச்சரித்ததாகவும் உடனடியாக பள்ளி வளாகத்தை காலி செய்யவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதாக ஒரு செய்தியை பரப்பினர்.

ஆனால் அது உண்மையில்லை என்றும் கடந்த முறை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் எந்த வாடகை பாக்கியும் நிலுவை வைக்கவில்லை எனவும், பள்ளி வழக்கத்திற்கு வேறு இடம் பார்ப்பதாகவும், அட்மிசன் ஏதும் புதிய ஆண்டிற்கு சேர்க்கவில்லை எனவும், தற்போது ஊடகங்களில் வெளியான செய்தி போலி பொய் செய்தி என லதா ரஜினிகாந்த் தரப்பு மறுத்தது.

இது ஒரு புறம் இருக்க கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜக படு தோல்வி அடைந்ததாக தமிழகத்தை சேர்ந்த ஊடகங்கள் சில செய்தி வெளியிட்ட வண்ணம் இருக்கும் சூழலில் அதுவும் போலி செய்தி என இன்று நிரூபணமாகியுள்ளது, 2015 ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலுடன் ஒப்பீடுக்கையில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் அதிக இடங்களை இழந்துள்ள நிலையில் பாஜக கூட்டணியான NDA மட்டுமே கடந்த தேர்தலை காட்டிலும் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. கீழே தரவு.

கேரளாவில் நடக்காத செயலை நடந்ததாக சொல்லும் ஊடகங்கள் நடந்த சம்பவத்தை சொல்ல மறுத்துவிட்டன
திருவனந்தபுரம் 52 வது வார்டு கவுன்சிலராக வெற்றிபெற்ற ஆஷாநாத் கடந்தமுறை 52 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வென்றவர் இம்முறை 2000 ஓட்டுக்களுக்கு அதிகமான வித்தியாசத்தில் வென்றிருக்கிறார். இவர் வென்ற பின் அளித்த பேட்டி முக்கியமானதாக பார்க்க படுகிறது, பாஜக மட்டுமே தொண்டர்களால் வழிநடத்தப்படும் கட்சி நேற்று எங்கள் தலைவருக்கு திருவனந்தபுரத்தில் போஸ்டர் ஒட்டிய நான் இன்று வேட்பாளராக வெற்றி பெற்று இருக்கிறேன் இது போல் எந்த கட்சியில் நடக்கிறது, கம்யூனிஸ்ட் பொலிட் பியாரோ எனும் அமைப்பில் இருப்பவர்கள் மட்டுமே அக்கட்சியை
வழிநடத்த முடியும்.

காங்கிரஸ் கட்சியில் வாரிசு அரசியல் ஏன் மற்ற மாநிலங்களிலும் இதே தான், எங்காவது போஸ்டர் ஒட்டிய ஒருவனுக்கு கட்சியில் சீட் கொடுத்து மேல் மட்டத்திற்கு உயர்த்தி இருக்கிறார்கள் என கூறமுடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார், இந்த கேள்வி கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் எதிரொலித்துள்ளது.

ஆசாநாத் குறிப்பிட்ட கருத்தை சுட்டிக்காட்டி திமுகவினரை கடுமையாக பாஜகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர், திமுகவில் போஸ்டர் ஓட்டினால் 200 ரூபாய் கிடைக்குமே தவிர தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது எனவும் உதயநிதி மகன் இன்பநிதி காலத்தில் கூட திமுகவினர் ஒரு குடும்ப அடிமையாக இருக்க வாய்ப்புகளே அதிகம் எனவும் சமூகவலைத்தளங்களில் வறுத்து எடுத்து வருகின்றனர். ஆமாம் இதெல்லாம் திமுகவில் நடக்குமா?

திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜகவின் வெற்றியாளர்கள் பட்டியல்

 1. சுருக்குதல் – புள்ளி
 2. செல்லமங்கலம்- காயத்ரி தேவி
 3. செம்பசாந்தி – உதயன்
 4. பாடிகோனம் – அர்ச்சனா
 5. செட்டிவிலகம்-மீனம்
 6. சாஸ்தமங்கலம்- மதுசூதனன்
 7. காஞ்சிராம்பரா – சுமி
 8. துருத்துமூலா- ராஜலட்சுமி
 9. நெட்டயம் – நந்தா பார்கவ்
 10. கொடுங்கனூர் – பத்மா
 11. பி.டி பி – கிரிகுமார்
 12. பாங்கோடு – பத்மலேகா
 13. திருமலை-அனில்குமார்
 14. பெரிய பயிர்- தேவி
 15. பூஜாப்புரா – வி வி ராஜேஷ்
 16. ஜெகதி – ஷீஜா மது
 17. கரமணா- மஞ்சு
 18. த்ரிகண்ணாபுரம் – ஜெயலட்சுமி
 19. பொன்னு மங்களம்- கோபகுமார்
 20. புன்னகமுகல் – மஞ்சு
 21. பப்பனம்கோடு – ஆஷநாத்
 22. எஸ்டேட் – மென்மையான
 23. நேதுங்காடு- அஜித்
 24. கலாடி – சிவகுமார்
 25. மெலங்கோடு- ஸ்ரீதேவி
 26. வேலார் – மோகனன்
 27. திருவள்ளம்- சத்தியவதி
 28. சாலா – சிமி
 29. மனக்காட் – சுரேஷ்
 30. குரியதி – மோகனன்
 31. ஸ்ரீகாந்தஸ்வரம் – ராஜேந்திரன்
 32. பால்குலங்கரா- அசோக் குமார்
 33. கரிககம் – குமரன்
 34. வேம்பு – தீபிகா
 35. கோட்டை – ஜானகி அம்மாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami