சுந்தரவல்லியை கைது செய்யாத காவல்துறை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

சுந்தரவல்லியை கைது செய்யாத காவல்துறை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

இந்திய இறையாண்மை ராணுவம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் பல மாதங்கள் கழித்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறைக்கு 30/12/20 குள் முழு வழக்கு விசாரணை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து வழக்கறிஞர் அசோக் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது முதல் இப்போது வரை என்ன நடைபெற்றது என குறிப்பிட்டுள்ளார்.
சுந்தரவல்லி என்பவரை காப்பாற்றுவதற்காக வேண்டுமென்றே அவர் செய்த குற்றத்திற்கு FIR போடாமல் அவர் மீது நியாயமான நடவடிக்கை எடுக்காமல் வேண்டுமென்றே காப்பாற்றுவது நியாயமா. ?

சுந்தரவள்ளி என்பவர் இந்திய நாட்டிற்கு எதிராகவும் பாகிஸ்தான் நாட்டிற்கு
சார்பாகவும் ஒரு வீடியோ வெளியிட்டார். மேலும் நாட்டில் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும். இந்தியாவில் வன்முறைகளை, கலவரத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்திய நாட்டின் மீது வெறுப்பையும் இந்திய ராணுவத்தின் மீது வெறுப்பையும் மக்களிடையே உருவாக்கும் விதமாக செயல்பட்டு ஒரு வீடியோவை வெளியிட்டார், அந்த வீடியோவில் உள்ளதாவது, “இந்திய ராணுவ வீரர்கள் கொத்துக்கொத்தாக கொலை செய்யப்படுகிறார்கள் என்றும், ராணுவ வீரர்களின் பிணத்தை வைத்து தன்னை சிறப்படுத்திக் கொள்கிறார் இந்திய பிரதமர் மோடி என்றும், மேலும் சர்ஜிகல் strike” பண்ணினோம் என்று இந்தியாவின் ராணுவமும்
பிரதமரும் சொன்னார்கள் ஆனால் ஒரே வாரத்தில் ராணுவ தளவாடங்கள் உள்ள
பகுதியில் பதான் கோர்ட்டில் நாலு பயங்கரவாதிகள் உள்ளே பூந்து அடித்தார்கள் என்னய்யா பெரிய பெரிய சர்ஜிகல் strike பண்ணினேன்னு சொல்றீங்க இந்தியாவும் இந்திய ராணுவமும் ஆனால் நான்கு பேர் உள்ள பூந்து அடிச்சுட்டாங்க என்றும்,
ஏதாவது பிரச்சனை இந்திய பிரதமர் மோடிக்கு வருதுன்னா உடனே ராணுவ
வீரர்களை கொல்லனும் என்றும், 2500 ராணுவ வீரர்களை ஆடு மாடுகளை போல் வண்டியிலே ஏற்றி வரிசையாக போனார்கள் என்றும், மேலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அபிநந்தனை மானத்தோடு அனுப்பினார் என்று எதிரி நட்டு
பிரதமரை புகழ்ந்து பேசி ஆனால் இந்திய பிரதமர் மோடி ராணுவவீரர்கள் 40 பேரை கொன்று விட்டார் என்று இந்திய நாட்டு பிரதமரை அவர்கள் முன்பு இகழ்ந்து இந்தியாவுக்கு எதிராக இந்திய இறையாண்மைக்கு ஏதிராக இந்திய ராணுவத்தை அசிங்க படுத்தி உலகம் முழுவதும் அந்த வீடியோவை
பரப்பினார். கொரானா பிரச்சனையில் இந்தியா எதிர்கொள்ள தயாராக இல்லை, என்றும் இந்தியா தோற்று போய் விட்டது என்றும் கூறியுள்ளார்” இந்தியாவுக்கு எதிராக, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசி உலகம் முழுவதும் பரப்பி
நாட்டுக்கு துரோகம் விளைவித்தார். மேலும் “அபிநந்தனுக்கு கோட்டு சட்டை
எல்லாம் வாங்கிக் கொடுத்து கௌரவமாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்த பாகிஸ்தான் பிரதமர் எங்களுக்கு அண்டை நாடுகளோடு சண்டை வேண்டாம் என்று இம்ரான்கான் பேசியதாகவும் இதனால் யாரை பேசியிருக்க வேண்டும் 40 பேரை பாதுகாக்க முடியாத மோடியையா அல்லது கோட்டு சட்டை வாங்கி
கொடுத்த இம்ரான்கானையா என்று கூறியுள்ளார்” மேற்கண்ட பேச்சு அரசியல் பேச்சு அல்ல, இந்திய தேசத்திற்கு துரோகம் விளைவிக்க வேண்டும் என்பதற்காகவும் நாட்டில் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும். ராணுவத்திற்கும் இந்திய அரசுக்கும் எதிராக கலவரத்தை
உருவாக்க வேண்டும் என்பதற்காக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். மேற்கண்ட
குற்றம் ஒரு புலன் கொள்ளக்கூடிய குற்றமாகும் Cognizable offence ஆகும். இந்த சூழலில் நான் உடனடியாக 22, 3,2020, 23.3.2020 அன்று புகார் கொடுத்து அந்தப் புகாரின் அடிப்படையில் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து
அதன் பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில் HR போட சொல்லி வழக்கு தொடர்ந்தோம். மேற்கண்ட வழக்கில் தங்களுடைய வழக்கறிஞரே (Public Prosecutor)
வழக்கு கோப்புகள் அனைத்தும் Cyber Crime Branch, T.Nagar -ல் மாற்றப்பட்டுள்ளது என்றும், விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், புகார்தாரரான என்னை விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார்கள் . அதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு போட்டது. நானும் விசாரணைக்கு நீங்கள்
கூப்பிடும்போதெல்லாம் தொடர்ந்து ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்து
வந்தேன். ஆனால் இது புலன் கொள்ளக்கூடிய குற்றம் Cogniable offence என்று தெரிந்துகொண்டே சுந்தரவல்லி மீது FIR போட்டு நடவடிக்கை எடுக்காமல் அவரை மறைமுகமாக காப்பாற்றி வருகிறீர்கள். இந்தியாவிற்கு துரோகம் செய்யும் சுந்தரவல்லி மீது நடவடிக்கை எடுக்காமல், சுந்தரவல்லியை காப்பாற்றி வருவது எந்த விதத்தில் நியாயம். Section 154 CRPC இன் படி, மற்றும் உச்ச நீதி மன்ற தீர்ப்பு லலிதா குமாரி Judgement இன் படி புலன் கொள்ளகூடிய குற்றம் தொடர்பான புகார் வந்தாலே HR போட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டம் தெளிவாகக் கூறியுள்ளது. ஆனால் இதுவரை FIR போடாமல் சுந்தரவல்லியை மறைமுகமாக
காப்பாற்றி வருகிறீர்கள். எனவே நியாயமான நேர்மையான விசாரணை நடத்தவேண்டும் என்று பணிவோடு தங்களை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு வழக்கறிஞர் அசோக் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இந்த மனு குறித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் புகார்தாரரான அசோக் மீண்டும் நீதிமன்றம் சென்றார் இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ,23/03/2020 அன்று
தேசத்துக்கு எதிராக பேசிய சுந்தரவள்ளி மீது வழக்கு பதிவு செய்ய புகார் மனு கொடுக்கப்பட்டது இந்த மனுவின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் 15562/2020 வழக்கு பதிவு செய்யப்பட்டது மனுவின் மீது நீதி அரசர் வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்தார் 01/10/2020
காவல்துறை இந்த உத்தரவின் மீது எந்த நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அது சம்பந்தமாக மீண்டும் ஒரு மனுவை காவல்துறையிடம் வழங்கப்பட்டது 11/11/2020 பிறகு இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது (20032/20 16/12/20)

நீதியரசர் 30/12 /2020 அன்று விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்
இந்திய நாட்டிற்கு எதிராகவும் பாகிஸ்தான் நாட்டிற்கு ஆதரவாகவும் பேசிய தேச துரோகி சுந்தரவல்லி மீது தமிழக காவல்துறை மறைமுகமாக காப்பாற்றி வருகிறது இதை எதிர்த்து சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நடைபெறும் ஆதரவு தாருங்கள் நம் தாய் நாட்டை காப்பாற்ற நீதிமன்ற உத்தரவை காவல்துறை மதிக்காத பட்சத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்படும். இந்த வழக்கு சம்பந்தமாக முழு ஒத்துழைப்பு கொடுத்த council of advocate S.ராமஜெயம் மற்றும் R.சசி வெங்கடேஷ் ஆகியோருக்கு நன்றி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறை தொடர்ந்து சுந்தரவள்ளியை கைது செய்யாத நிலையில் கடுமையாக நீதிமன்றம் கண்டித்து 30/12/2020 அன்று முழு வழக்கு விசாரணையும் தாக்கல் செய்துள்ளது, எனவே சுந்தரவள்ளி இந்த முறை காவல்துறையிடம் இருந்து தப்பித்தாலும் நீதிமன்றத்திடம் இருந்து தப்பிக்க முடியாத நிலை உண்டாகியுள்ளது, இந்திய இறையாண்மை குறித்து தொடர்ந்து அவதூறாக பேசுவரும் சுந்தரவல்லியை சிறைக்கு அனுப்பும் வரை ஓய போவதில்லை என அசோக் மற்றும் அவரது சக குழுவினர் களத்தில் இறங்கி இருப்பது பலரலாறும் பாராட்டப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami