BREKING அமிட்ஷா வருகை எதிரொலி மேற்கு வங்கத்தில் பழிக்கு பலி வாங்கியது பாஜக !! மம்தா சாப்டர் ஓவர்!!!

BREKING அமிட்ஷா வருகை எதிரொலி மேற்கு வங்கத்தில் பழிக்கு பலி வாங்கியது பாஜக !! மம்தா சாப்டர் ஓவர்!!!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அவசர சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார் திரிணமூல் கட்சியை சேர்ந்த கிழக்கு மிட்னாபூரின் எம்.எல்.ஏ பனாஷ்ரி மைட்டி நேற்று ராஜினாமா செய்துள்ளார் , ஆளும் திரிணமூல் கட்சியில் இருந்து 9 எம்.எல்.ஏ கள் கடந்த 48 மணி நேரத்திற்குள் ராஜினாமா செய்துள்ளனர்.

இது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநில வருகைக்கு முன்னதாக ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். 2021 ஜனவரி மாதத்திற்குள் 60-65 எம்.எல்.ஏ.க்கள் ஆளும் திரிணாமுல் காங்கிரஸிலிருந்து விலகுவார்கள் என்று மேற்கு வங்க பாஜக துணைத் தலைவர் அர்ஜுன் சிங் தெரிவித்துள்ளார்.

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பலர் ராஜினாமா செய்ய காரணம் WB முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன், அபிஷேக் பானர்ஜி கட்சியில் ஆதிக்கம் செலுத்துவதே எனவும் , இதன் காரணமாக முன்னாள் தலைவர் சுவேந்து ஆதிகாரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் விலகியதாக கூறப்படுகிறது.

சுவேந்து ஆதிகாரி வெளியேறியதைத் தொடர்ந்து ஜிதேந்திர திவாரி, அபிஜித் ஆச்சார்யா, தீப்தங்சு சவுத்ரி, சில்பத்ரா தத்தா, பனாஷ்ரி மைட்டி மற்றும் பிற உறுப்பினர்கள் , எம்.எல்.ஏக்கள் மற்றும் மம்தா பானர்ஜி தலைமையிலான கட்சியின் தலைவர்கள் தொடர்ச்சியாக ராஜினாமா செய்து வருகின்றனர்.

மம்தா பானர்ஜி தலைமைத்துவத்திற்குள் நடந்து வரும் மோதல்கள் மற்றும் ஒன்றன் பின் ஒன்றான ராஜினாமாக்கள் குறித்து விவாதிக்க அவசர கூட்டத்தை நடத்துகிறார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகையுடன், சுவேந்து ஆதிகாரி உட்பட பல கிளர்ச்சி டி.எம்.சி தலைவர்கள் பாஜக கட்சியில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்தபட்சம் மேற்கு வங்கத்தில் 50 சட்டமன்றத் தொகுதிகளில் ஆதிகாரி குடும்பம் செல்வாக்கு செலுத்துவதாக நம்பப்படுகிறது, இது தேர்தலுக்கு முன்னதாக டி.எம்.சிக்கு பெரும் பின்னடைவை விளைவிக்கும் என்பதை நிரூபிக்கக்கூடும். அமிட்ஷா இன்று மற்றும் நாளை மேற்கு வங்கத்தில் தங்கி பிரச்சாரம் மற்றும் பல பொது கூட்டங்களில் பேச இருக்கிறார். 2019 பொதுத் தேர்தலில் ஆளும் டி.எம்.சியின் பிரதான போட்டியாளராக பாஜக உருவெடுத்து, 42 மக்களவைத் தொகுதிகளில் 18 இடங்களை வென்றது.

அடுத்த சட்டமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொண்டு வெற்றி பெறுவது என்பது மட்டுமே பாஜகவின் திட்டமாக இருந்தது, ஆனால் அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா மீது மேற்கு வங்கத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் அக்கட்சியின் தேசிய தலைவர்களுக்கு கடும் அதிருப்தியை கொடுத்துள்ளது, குறிப்பாக பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமிட்ஷா, ராஜ்நாத் சிங் மூவரும் சந்தித்து மேற்கு வங்க நிலவரம் குறித்து ஆலோசனை செய்தனர்.

அதன் பிறகே ஒன்றன் பின் ஒன்றாக மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ கள் ராஜினாமா செய்து வருகின்றனர் நட்டா மீது தாக்குதல் நடந்த சம்பவத்தை முன் வைத்தே மேற்கு வங்க ஆட்சியை மத்திய அரசால் கலைத்து இருக்க முடியும் ஆனால் அது மம்தா பானர்ஜிக்கு ஒருவேலை அனுதாப வாக்குகளை பெற்று தரலாம் என்பதால் இப்போது அக்கட்சி எம். எல். ஏ களை வைத்தே ஆட்சியை முடிவிற்கு கொண்டுவர பாஜக காய் நகர்த்தியுள்ளது.

தொடர்ந்து தன் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ கள் ராஜினாமா செய்து வருவதால் இரும்பு பெண்மணி என பட்டம் பெற்றம் மம்தா பானர்ஜி ஆட்சியை காப்பாற்ற ஒவ்வொரு எம். எல். ஏ களுக்கு தானே போன் செய்து ராஜினாமா செய்யவேண்டாம் என கதறி வருகிறாராம், இரும்பு பெண்மணியை இப்படி ஆக்கிவிட்டார்களே.

எங்களது செய்திகள்  உடனடியாக  உங்களை வந்து அடைய வேண்டுமா? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami