மேற்கு வங்கத்தில்நடப்பது என்ன? ஏன் பிரசாந்த் கிஷோரை மம்தா கட்சியினர் திட்டி தீர்க்கிறார்கள்? திமுகவிலும் பட்டியல் கசியுமா?

மேற்கு வங்கத்தில்நடப்பது என்ன? ஏன் பிரசாந்த் கிஷோரை மம்தா கட்சியினர் திட்டி தீர்க்கிறார்கள்? திமுகவிலும் பட்டியல் கசியுமா?

மேற்கு வங்க மாநிலத்திற்கு சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற 6 மாதங்கள் உள்ள நிலையில் அதுவரை மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு தப்பிக்குமா என்ற சந்தேகம் அம்மாநில மக்களுக்கு எழ தொடங்கி உள்ளது.

மம்தா பானர்ஜிக்கு அடுத்த இடத்தில் உள்ளதாக கூறப்பட்ட சுவேந்து அதிகாரி திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார், அவர் உள்துறை அமைச்சர் அமிட்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்துவிட்டார், மேலும் 11 எம் எல் ஏ கள் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர்.,மேலும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம். எல் ஏக்களும் பாஜகவில் இணைந்துள்ளனர்.

வழக்கமாக சட்டமன்ற பொது தேர்தல், இடைத்தேர்தலுக்கு மட்டுமே வென்ற வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும், ஆனால் மேற்குவங்கத்தில் பாஜக திரிணமூல் இடையே உச்சக்கட்ட மோதல் நிலவி வருவதால் தினமும் கட்சிமாறும் எம்.எல்.ஏ கள் பட்டியல் வெளியாகி வருகிறது, மேற்கு வங்க மாநில பாஜக துணை தலைவர் ஜனவரி மாத இறுதிக்குள் 60-65 திரிணமூல் காங்கிரஸ் கட்சி MLA கள் பாஜகவில் இணைவார்கள் என்று கூறியிருப்பது அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இன்று மற்றும் நாளை உள்துறை அமைச்சர் அமிட்ஷா மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருப்பதால் அடுத்து என்ன நடக்கும் எத்தனை பேர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறுவார்கள் என்ற பயத்தில் அக்கட்சி தலைமை அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இவை அனைத்திற்கும் மேற்கு வங்கத்தில் சுற்று பயணம் மேற்கொண்ட பாஜக தேசிய தலைவர் நட்டா மீது அம்மாநில திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தியதே காரணம் என கூறப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சிக்கு வருவாரா என்ற கேள்வி மாறி, தற்போதைய தனது ஆட்சியை மம்தா காப்பாற்றி கொள்வாரா என்ற கேள்விதான் எழுந்துள்ளது . இரும்பு பெண் மணி என வர்ணிக்கப்பட்ட மம்தா பானர்ஜீ இப்போது தனது எம்எல் ஏ களை கூட காப்பாற்ற முடியாத நிலைக்கு சென்று இருப்பதற்கு காரணம் பிரசாந்த் கிஷோர்தான் எனவும் அவரால் தான் கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ச்சியாக விலகி வருவதாகவும் அம்மாநில திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சுமத்து கின்றனர்.

அத்துடன் பிரசாந்த் கிஷோர் உண்மையில் மம்தா பானர்ஜியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர வேலை செய்யவில்லை மாறாக இங்கு இருக்கும் மூத்த தலைவர்களை பாஜகவிற்கு மாற்றவே வேலை செய்கிறார் அவர் உண்மையில் ஒரு பாஜக ஏஜென்ட் எனவும் அக்கட்சியின் மூன்றாம் கட்ட தலைவர்கள் வெளிப்படையாக குற்றம் சுமத்துகின்றனர்.

பல காலமாக மம்தா பானர்ஜியின் பேச்சிற்கு மறுவார்த்தை பேசாத திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் இப்போது மம்தா பானர்ஜியை எதிர்த்து கட்சி அலுவலகத்தில் வைத்தே பேசுவது, மம்தா மீதான தொண்டர்கள் பார்வை இறங்கி இருப்பதை காட்டுகிறது, தேர்தலில் மம்தா பானர்ஜியை மீண்டும் முதல்வராக மாற்றுவேன் என கூறி பிரசாந்த் கிஷோர் குழுவினர் பலருக்கு தேர்தலில் சீட் கொடுக்க கூடாது என மம்தாவிடம் கூற அவரும் அதனை ஏற்று கொண்டார்.

இந்த பட்டியலில் உள்ள நபர்கள் யார் என்பது தேர்தல் வரை ரகசியமாக வைத்திருக்க மம்தா கூறிய நிலையில் அது வெளியே கசிந்துள்ளது, இதனை அடுத்தே பல சிட்டிங் எம். எல். ஏ கள் மூத்த கட்சி தலைவர்கள் என பலர் தினமும் பாஜக பக்கம் தாவி வருகின்றனர், இந்நிலையில் யார் அந்த பட்டியலை கசிய விட்டது என மம்தா பானர்ஜி பிரசாந்த் கிஷோர் குழுவினருடன் கேட்க அவர்கள் தங்கள் தரப்பில் எந்த தவறும் இல்லை என கைவிரித்து விட்டார்களாம்.

மொத்தத்தில் பொறியில் சிக்கிய எலியை போன்று மம்தா பானர்ஜி பிரசாந்த் கிஷோர் தரப்பை விட்டு முழுமையாக விலக முடியாத நிலையிலும் அதே நேரத்தில் அவர்களை முழுமையாக நம்ப முடியாத நிலைக்கும் அவர் இருப்பது தற்போதைய அவரின் முன்னுக்கு பின் முரணான நடவடிக்கை மூலம் veliபடையாக தெரிய வருகிறது.

இதே பிரசாந்த் கிஷோரை தான் பல நூறு கோடி செலவில் திமுக தலைவர் ஸ்டாலின் தன்னை முதல்வர் நாற்காலியில் அமரவைக்க ஒப்பந்தம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியை போன்று யாருக்கு சீட் இல்லை என்ற பட்டியல் திமுக தலைமைக்கு பிரசாந்த் கிஷோர் தரப்பு சேகரித்து வைத்துள்ளதாம், அந்த பட்டியல் மட்டும் கசிந்தால் அடுத்து மேற்கு வங்கத்தை போன்று தமிழக அரசியலிலும் முழுமையான மாற்றங்கள் உண்டாகலாம் என கூறப்படுகிறது.

திமுகவில் அவ்வாறு நடக்க வாய்ப்பு இல்லை ஏன் என்றால் திமுக வலுவான கட்சி என நினைத்தால் அது தவறு எனவும் சிட்டிங் எம் எல் ஏ, கு.க. செல்வம் எதன் அடிப்படையில் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் என நினைத்து பாருங்கள் அது ஒன்றே மேற்கூறிய அனைத்து தகவலுக்கும் சான்றாக அமையும் என ஒரே பதிலை கொடுக்கிறது நமது டெல்லி தரப்பு. வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் பட்டியல் கசியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami