அப்படி நடந்தால் நான் முழுவதுமாக விலகிவிடுகிறேன் பிரஷாந்த் கிஷோர் ட்விட்டரில் தகவல்!! திமுக மம்தா பானர்ஜி அதிர்ச்சி!!!

அப்படி நடந்தால் நான் முழுவதுமாக விலகிவிடுகிறேன் பிரஷாந்த் கிஷோர் ட்விட்டரில் தகவல்!! திமுக மம்தா பானர்ஜி அதிர்ச்சி!!!

மேற்கு வங்கத்தில் பாஜக இரட்டை இலக்கத்தில் வருகின்ற தேர்தலில் வெற்றி பெறாது எனவும் அவ்வாறு நடந்தால் நான் முழுமையாக விலகி விடுவதாக IPAC வியூகம் வகுக்கும் குழுவின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். இது தற்போதைய நிலையில் மம்தா பானர்ஜி மற்றும் திமுக கட்சியினருக்கு மகிழ்ச்சியை கொடுப்பதற்கு பதிலாக அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மேற்கு வங்கத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 40 % வாக்குகளை பெற்றது அதோடு 18 பாராளுமன்ற தொகுதிகளையும் கைப்பற்றியது, ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 22 இடங்களில் வெற்றி பெற்றதுடன் 43% வாக்குகளை பெற்றது, இந்நிலையில் பாஜக இரட்டை இலக்க எண்களை பெறாது என பிரசாந்த் கிஷோர் கூறியிருப்பது உண்மையில் இவர் வியூகம் வகுக்கும் பணியை செய்கிறாரா இல்லை நம்பி வந்தவர்களை சமாதான படுத்துகிறார்களா என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது.

உள்துறை அமைச்சர் அமிட்ஷாவின் இரண்டு நாள் மேற்குவங்க மாநில பிரச்சாரம் அம்மாநில பாஜகவினர் இடையே மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது, பாஜக ஆட்சியில் இல்லாத வேறு எந்த மாநிலத்திலும் இது போன்று மக்கள் கூட்டத்தை அக்கட்சியினர் கூட்டுவது கடினமே, இதை அமிட்ஷா வெளிப்படையாக கூறிவிட்டார் அத்துடன் 200 தொகுதிகளுக்கு அதிகமாக மேற்குவங்கத்தில் வெற்றி பெறுவோம் எனவும் அமிட்ஷா தெரிவித்து இருந்தார்.

இது மாநில ஊடகங்களில் முழு நேர விவாதமாக மாறிய நிலையில் இன்று மம்தா பானர்ஜிக்கு வியூகம் வகுக்கும் குழுவின் தலைவர் பிரசாந்த் கிஷோர் பாஜக இரண்டு இலக்கத்தை பிடித்தால் நான் பொது தளங்களில் இருந்து விலகி விடுவதாக அறிவித்துள்ளார், பிரசாந்த் கிஷோர் மீது திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட ஒப்பந்த தாரர்கள் அதிருப்தி அடைந்ததை ஈடுகட்ட பிரசாந்த் கிஷோர் இது போன்று நம்பிக்கை தரும் விதத்தில் பதிவிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

பல நூறு கோடி கொடுத்து பிரசாந்த் கிஷோரை ஒப்பந்தம் செய்துள்ள மம்தா பானர்ஜி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் பிரசாந்த் கிஷோரின் ட்விட்டர் பதிவு செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்திருப்பார்கள் காரணம் இவ்விரு கட்சிகளும் ஆட்சிக்குவரவில்லை என்றால் பிரசாந்த் கிஷோருக்கு எந்த நஷ்டமும் இல்லை அவர் விலகி செல்வதாக அறிவித்து இவர்களிடம் சம்பாரித்த பணத்தை கொண்டு ராஜவாழ்க்கை வாழலாம் ஆனால் இவ்விரு கட்சி தலைவர்களின் நிலை என்னவாகும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami